‘கள்ளக்காதலன்’ இறந்த அதே இடத்தில்…. தற்கொலை… ‘நெல்லையை’ அதிரவைத்த இளம்பெண்!

0
69

கள்ளக்காதலன் இறந்த அதே இடத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லையை அடுத்த மலையாளமேடு ரெயில்வே கேட் அருகில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

young-women-suicide-near-tirunelveli-police-investigateஇதைப்பார்த்த பொதுமக்கள் நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் பெயர் கற்பகம்(25). திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

கருத்து வேறுபாடு காரணமாக கற்பகம் கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கற்பகம் வேலைபார்த்து வந்து தனியார் நிறுவனத்தில் மகராஜன்(26) என்பவருடன் கற்பகத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து கற்பகத்தின் தந்தை அவரை கண்டித்ததால் இருவரும் திருப்பூர் சென்று 1 வருடத்திற்கும் மேலாக கணவன்,மனைவியாக வசித்து வந்துள்ளனர்.

கற்பகத்தின் தந்தை மகளை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து, திருப்பூரில் மகராஜனுடன் குடும்பம் நடத்தி வந்த கற்பகத்தை மீட்டு போலீசார் அவரது தந்தையிடம் ஒப்படைத்து உள்ளனர்.

இதற்கிடையில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கற்பகம், மகராஜனிடம் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் மகராஜனின் பெற்றோர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் மகராஜன் கடந்த 3-ம் தேதி மலையாளமேடு ரெயில்வே கேட் அருகே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மகராஜனின் உடலை இறுதியாக கற்பகம் காண விரும்பினார். ஆனால் அதற்கு அவரின் பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற கற்பகம் மகராஜன் தற்கொலை செய்துகொண்ட அதே இடத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.