1 கி.மீ உயர சாம்பல் புகை; 6,000 பேரை பலிகொண்ட வரலாறு..பிலிப்பைன்ஸை மீண்டும் பதறவைக்கும் டால் எரிமலை

0
119

மலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் சுமார் 8 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ளது டால் எரிமலை. டால் எரிமலை பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மிகச் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றாகும். மணிலாவின் தென்பகுதியில் 31 மைல்கள் தொலைவில் உள்ள இந்த எரிமலை ஏரிக்கு நடுவே அமைந்திருந்தாலும் ஆபத்து நிறைந்த எரிமலையாக பார்க்கப்படுகிறது.

இதுவரை பலமுறை வெடித்து இதுவரை 6000 பேருக்கு மேல் காவு வாங்கியிருக்கிறது இந்த எரிமலை.

எனினும் ஏரிகளுக்கு நடுவே அமைந்திருப்பதால் ஆபத்தை தாண்டி சுற்றுலா பயணிகளின் ட்ரெக்கிங் பகுதியாகவும் இருந்துவந்தது. எத்தனை முறை வெடித்தாலும் இங்கு ட்ரெக்கிங் சென்றுக் கொண்டிருந்தார்கள்.

frewsa

இதற்கிடையே, இன்று மதியத்தில் இருந்து இந்த டால் எரிமலையில் இருந்து 1 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் வெளியேறி வருகிறது.

இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. மேலும் பலத்த சத்தத்துடனும், அதிர்வுகளுடனும் வெடித்து சிதறிவருகிறது.

குறிப்பாக எரிமலையில் இருந்து சாம்பலும், கொதிநீரும் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வானை நோக்கி வீசப்பட்டு வருகிறது.

இதனால் மலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் சுமார் 8 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.