சமந்தாவின் டாட்டூ ரகசியத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்

0
83

முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, விருது விழாவில் கலந்துக் கொண்ட போது வெளியிட்ட புகைப்படத்தில் இருந்த டாட்டூ ரகசியத்தை ரசிகர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மத்தியில் ‘டாட்டூ’ போட்டுக்கொள்வது வழக்கமான ஒன்று.

விதவிதமான எழுத்துக்கள், டிசைன்களில் அந்த டாட்டூக்கள் இருக்கும். நடிகர் நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா, அவருடைய சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவது வழக்கம்.

202001081930063864_1_samantha-1._L_styvpfபல லட்சம் பேர் அதற்கு லைக் கொடுப்பார்கள். சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சமந்தா அப்போது அணிந்த ஆடையுடன் சில புகைப்படங்களை வெளியிட்டார்.

அதில் ஒரு புகைப்படத்தில் அவரது வலது இடுப்பு பகுதியில் இருக்கும் டாட்டூ என்ன என்பதுதான் கடந்த சில நாட்களாக பரபரப்பானது.

அது அவருடைய கணவர் நாக சைதன்யாவில் செல்லப் பெயரான ‘சாய்’ என்பதின் ஆங்கில கையெழுத்து டாட்டூ என கண்டுபிடித்துவிட்டார்கள் ரசிகர்கள்.

இது நாள் வரை அந்த டாட்டூவை சமந்தா மறைத்து வைத்திருந்தார். கடந்த வருடம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் கூட அது சரியாகத் தெரியாமல் இருந்தது. தற்போது அந்த டாட்டூ தெளிவாகத் தெரியும்படி இருக்கிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.