முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

0
119

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

ஏ9 வீதியில் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. குறித்த சம்பவம் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

IMG20200105211458விபத்தில் உயிரிழந்த இளைஞர் சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சுப்பையா தர்ஷன் என்பவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

IMG20200105211450இதையடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*