ஜனவரி மாத ராசி பலன்கள் 2020 – மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு யோகமான மாதம்

0
149

பிறக்கப் போகும் 2020ஆம் ஆண்டு எப்படி இருக்குமே சந்தோஷமாக இருக்குமா? அதிர்ஷ்டம் தேடி வருமா? புதிய வேலை கிடைக்குமா? வருமானம் வருமா என்ற எதிர்பார்ப்புகள் பல ராசிக்காரர்களுக்கும் இருக்கும்.

ஜனவரி மாதம் மாதம் புத்தாண்டின் புதிய மாதம் இந்த முதல் மாதத்தில் சூரியன், சனி, புதன்,கேது, குரு ஆகிய ஐந்து கிரகங்கள் தனுசு ராசியில் கூடியுள்ளன. மகரம் ராசியில் சந்திரன் சுக்கிரன் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.

இந்த மாதம் கிரகங்கள் சில தனுசு ராசியில் இருந்து பிரிகின்றன. முதலில் சுக்கிரன் 9ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு மாறுகிறார். 13ஆம் தேதி புதன் தனுசுவில் இருந்து பிரிந்து மகரம் ராசிக்கு மாறுகிறார். 15ஆம் தேதி சூரியன் மகரம் ராசிக்கு செல்கிறார்.

மாத இறுதியில் அதாவது 24ஆம் தேதி தனுசு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரித்த சனி பகவான் மகரத்திற்கு மாறுகிறார். மாத பிற்பகுதியில் மகரம் ராசியில் 3 கிரகங்கள் கூட்டணி இணைகிறது. இந்த கிரகங்களின் கூட்டணி சஞ்சாரத்தினால் மிதுனம் மற்றும் கடகம் ராசிக்காரர்களுக்கு தொழில், வேலை, இடமாற்றம், பண வருமானம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

astro-mithuman-1-1577003809குருவின் சுப பார்வை

புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே, ஆறாம் வீட்டு அதிபதி செவ்வாய் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு விபரீத ராஜயோகம். உங்க ராசிக்கு விரைய ஸ்தான அதிபதி ஐந்துக்கு அதிபதி சுக்கிரன் ஒன்பதாம் வீட்டிற்கு வருகிறார்.

கல்வி வாய்ப்பு அற்புதமாக இருக்கும். உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் உள்ள குருவின் பார்வை மிதுனம் ராசியின் மீது விழுவதால் சுப காரியங்களுக்கான பேச்சுவார்த்தை நடக்கும். உங்க ராசி நாதன் புதன் எட்டாம் வீட்டிற்கு மாறுகிறார்.

 சூரியன் புதன் கூட்டணி

எட்டாம் வீட்டில் சூரியனும் 15ஆம் தேதி மாறுகிறார். மாத இறுதியில் சனி எட்டிற்கு மாறுகிறார். அஷ்டமத்து சனி வருவதால் பயமில்லை. காரணம் செவ்வாயும் விபரீத ராஜயோகத்தை கொடுக்கும் நிலையில் சனி பகவானும் எட்டாம் வீட்டிற்கு மாறுவது விபரீத ராஜயோகம். மிதுனத்தை பொருத்தவரைக்கும் ஜனவரி மாதத்தில் அஷ்டம ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் இணைகின்றன. சில கோள்கள் சாதகமாகவும் சில கோள்கள் பாதகமாகவும் இருக்கின்றன. உங்களுக்கு எதிர்மறையாக எதுவும் நடக்காது.

சனியால் பாதிப்பு நீங்கும்

வெளிநாடு போகும் யோகம் வரும் வெளியூர் போகவும் வாய்ப்பு கிடைக்கும். பிசினஸ் செய்பவர்கள் கவனமாக இருங்க முதலீடுகளை அதிகம் பண்ணாதீங்க. சனிபகவான் தடைகளையும் நெருக்கடிகளையும் கொடுத்தாலும் கடைசியில் முடிவுக்கு வரும்.

2020 ஜனவரி சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும். பூமி யோகம் கிடைக்கும். வங்கியில் லோன் வாங்கி இடம், வீடு வாங்க வாய்ப்பு கிடைக்கும். ஜனவரி மாதம் நல்லதே நடக்கும்.

astro-kadagam-1-1577003803சந்தோஷமான ஜனவரி

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடகம் ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான துவக்கமாக இருக்கிறது. நல்ல வேலை, சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கும். கண்ட சனி காலம் என்றாலும் பாதிப்புகள் எதுவும் இருக்காது. சின்னச் சின்ன சங்கடங்கள் இருந்தாலும் பாதிப்புகள் இருக்காது. செவ்வாய் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு.

தொழில் லாபம் கிடைக்கும்

லாப ஸ்தான அதிபதி சுக்கிரன் எட்டில் அமர்கிறார். ஆறாம் வீட்டிற்கு அதிபதி குரு ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். மாத துவக்கத்தில் இருந்த கிரகங்கள் படிப்படியாக இடமாற்றம் அடைவது கடகம் ராசிக்காரர்களுக்கு மாற்றங்களையும் ஏற்றங்களையும் கொடுக்கும்.

உங்க பலம் அதிகரிக்கும் , வருமானம் அதிகரிக்கும், ரியல் எஸ்டேட் தொழில் வருமானத்தை கொடுக்கும். சனி ஏழில் மாற்றமடைவதால் கூட்டணி தொழில் லாபத்தை கொடுக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் எற்படும். வார்த்தைகளில் கவனமாக இருங்க. சுபமான பேச்சுக்களை கொஞ்சம் நிதானமாக எடுக்கலாம்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.