இயற்கை மருத்துவமே முதன்மையானது!

0
50

ஆயுட்காலம் காக்கும் அருமருந்து ஆயுர்வேதம் என்பார்கள். ஆயுர்வேதத்தில் உடல்நலக் குறைவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் காலநிலை மாற்றங்கள்

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது சான்றோர் வாக்கு. ஆனால் எங்கு சுற்றிலும் நோய்களின் பிடியில்தான் மனிதகுலமே உள்ளது. மனித குலத்தை அல்லல் பட வைக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தியும், நோய்கள் வராமல் தடுத்தும் ஆரோக்கியமான வாழ்வை வாழ வைப்பது இயற்கை மருத்துவம்.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பாரம்பர்ய இயற்கை மருத்துவத்தைதான் நமது முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். காலப்போக்கில் இவற்றை நாம் மறந்துவிட, மீண்டும் தற்போது இயற்கை மருத்துவம் எழுச்சி பெற்று வருகிறது.

சித்த மருத்துவம் :

பசியாற்றும் உணவை உயிர்காக்கும் மருந்தாகக் கொடுப்பது சித்த மருத்துவம். சித்த மருத்துவத்தின் மருந்துகளை மூலிகை, தாது மற்றும் சீவப் பொருள்களில் இருந்து தயாரிக்கின்றனர். வாத, பித்த, கப உடலமைப்பை பொறுத்தே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

இயற்கை மருத்துவம்ஆயுர்வேதம் :

ஆயுட்காலம் காக்கும் அருமருந்து ஆயுர்வேதம் என்பார்கள். ஆயுர்வேதத்தில் உடல்நலக் குறைவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் காலநிலை மாற்றங்கள்… அதனால் ஏற்படும் நோய்களுக்கு சிறந்த தீர்வாக ஆயுர்வேத மருத்துவம் அமைகிறது.

ஹோமியோபதி :

நோயின் அறிகுறிகளை மட்டுமல்லாமல் நோயாளிகளின் உடல், உளவியல் பண்புகள் குறித்தும் ஹோமியோபதியில் விசாரிக்கப்படும். மருந்தின் அளவைக் குறைத்து வீரியத்தை அதிகமாக்கி நோயைக் குணப்படுத்துவதே ஹோமியோபதி மருத்துவத்தின் முறையாகும்.

இது போன்று நூற்றாண்டுகளாக கத்தியின்றி ரத்தமின்றி சிகிச்சை அளிக்கும் பாரம்பர்ய மருத்துவங்கள் பல இருக்கின்றன. இப்போதுதான் நாம் அவற்றின் அருமை அறிந்து அதனை நாடிச்செல்கின்றோம்.

dd2-1024x57601. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!
05. காது மந்தம் போக்கும் தூதுவளை!
06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!
07. பித்த மயக்கம் தீர புளியாரை!
08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!
09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!
10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!
11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!
12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!
13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!
14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!
15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!
16. இளைத்த உடல் பெருக்க மிளகு!
17. பொடுகைப் போக்க தயிரில் குளி!
18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!
19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!
20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!
21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!
22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!
23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!
24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!
25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!
26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!
27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!
28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!
29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!
30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.!

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.