5 ஆவது நாளில் இலங்கைக்கு 7 தங்கப் பதக்கங்கள

0
74
13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை ஆண்கள் அணி புதிய தெற்காசிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்த அதேவேளை பெண்கள் அணியும் 4 தர 100 மீற்றர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்றது.
 தெற்காசிய விளையாட்டு விழாவின் 5ஆவது நாளான இன்றைய தினம் இலங்கைக்கு மேலும் 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. மெய்வல்லுநர் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களும்  கோல்வ் விளையாட்டில் 2 தங்கப் பதகக்கங்களும் பட்மின்டனில் இரண்டு தங்கப் பதக்கங்களும் இலங்கைக்கு இன்று கிடைத்தன.
 இதற்கு அமைய 24 தங்கம், 42 வெள்ளி, 69 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள இலங்கை, பதக்கங்கள் நிலையில் தொடர்ந்தும் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது.
 இருபாலாருக்குமான தொடர் ஓட்டங்களில் இலங்கை முழுமையான ஆதிக்கம்
 கத்மண்டு தசரத் ரங்கசாலா விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டிகளில் இலங்கை மகத்தான வெற்றிகளை ஈட்டியது.
4-x-100-meters-men-new-meet-record-39
ஆண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியை இலங்கை அணியினர் 39.14 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர். பாகிஸ்தானில் 2004 இல் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இந்திய அணியினர் நிலைநாட்டியிலிருந்த 39.41 செக்கன்கள் என்ற சாதனையை முறியடித்தே இலங்கை அணியினர் புதிய சாதiயை நிலைநாட்டினர்.
பெண்களுக்கான 4 X 100 மீற்றர் தொடர் ஓட்டத்தை இலங்கைப் பெண்கள் அணி 44.89 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.
நிலானிக்கு இரண்டாவது தங்கம்

 பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியை 16 நிமிடங்கள், 55.18 செக்கன்களில் நிறைவு செய்த நிலானி ரத்நாயக்க தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இவர் வென்ற இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

மெய்வல்லுநர் போட்டிகளின் ஆரம்ப நாளன்று பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெற்றியீட்டி நிலானி, இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கதை வென்றுகொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குண்டு எறிதலில் வெள்ளி

பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தாரிகா குமுதுமாலி பெர்னாண்டோ (14.35 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் ஆண்களுக்கான குண்டு எறிதலில் பங்கேற்ற சமித் மதுஷங்க (15.55 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

 இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை நேற்று வென்ற குமார் சண்முகேஸ்வரனுக்கு இன்று நடைபெற்ற 5,000 மிற்றர் ஓட்டப் போட்டியில் மாற்று வீரராக களமிறங்கி பதக்கம் வெல்லமுடியாமல் போனது.
 பெண்களுக்கான 400 மிற்றர் சட்டவேலி ஓட்டப ;போட்டியில் கௌஷல்யா மது வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் இப் போட்டியை 1.00.40 செக்கன்களில் ஓடி முடித்தார். பாகிஸ்தான் வீராங்கனை 1.00.35 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
 பெண்களுக்கான பளுதுக்கல் போட்டியில் தேசிய சாதனையுடன் ஆர்ஷிகாவுக்கு வெள்ளி
 நேபாளத்தின் பொக்காரா நகரில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா பளுதூக்கல் போட்டியில் இலங்கை வீராங்கனை விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
Untitled-1-392-696x464
யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான ஆர்ஷிகா பெண்களுக்கான 64 கிலோகிராம் எடைப் பிரிவில் பங்கேற்று ஸ்னெச் முறையில் 70 கிலோகிராம் எடையையும் கிலீன் அண்ட்; ஜேர்க் முறையில் 100 கிலோ கிராம் எடையையும் தூக்கி மொத்தம் 170 கிலோ கிராம் எடையை பதிவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
 இலங்ககை சார்பாக பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றுபவர்களில் வயதில் குறைந்தவரான ஆர்ஷிகா, ஜேர்க் முறையில் 100 கிலோ கிராம் எடையைத் தூக்கியதன் மூலம் 98 கிலோ கிராம் எடை என்ற இலங்கை;கான தனது சொந்த சாதனையைப் புதுப்பித்தார்.
மேலும் சர்வதேச பளுதூக்கலில் ஆர்ஷிகா வென்றெடுத்த இரண்டாவது பதக்கம் இதுவாகும். மலேசியாவில் 2016இல் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்கல் வல்லவர் போடடிகளில் ஆர்ஷிகா வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
இதேவேளை, ஆண்ளுக்கான 67 கிலோ கிராம் எடைப் பிரிவில் சதுரங்க லக்மாகல் வெள்ளிப் பத்ககம் வெல்ல, 55 கிலோ கிராம் எடைப் பிரிவில் நதீஷானி ராஜபக்ஷ வெள்ளிப்பதக்கம் வென்றார்.
 பட்மின்டனில் இலங்கைக்கு 2 தங்கங்கள்
 பெண்களுக்கான பட்மின்டன் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில இலங்கையின் இரண்டு ஜோடியினர் மோதியதால் இலங்கைக்கு தங்கம், வெள்ளி உறுதியாகிருந்தது. எந்த ஜோடி தங்கத்தை வெல்லப் போகின்றது என்ற கேள்வியே இறுதிப் போட்டியின்போது எழுந்தது.
திலினி மற்றும் காவிந்தி ஜோடியினர் 2-0 என்ற ஆட்டங்கள் அடிப்படையில்; அச்சினி, உப்புலி ஜோடியினரை வீழ்த்தி தங்கம் வென்றனர். இலங்கை சார்பாக இரண்டு ஜோடியினர் இறுதிப் பொட்டியில் மோதியது இதுவே முதல்தடவையாகும்.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் சச்சின் டயஸும் புவனேக்க குணதிலக்கவும் ஜோடி சேர்ந்து இந்தயிhவின் கிருஷ்ண பிரசாத், துருவ் கப்பில ஜோடியை 2-1 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் வீழ்த்தி தங்கப்பதக்கதை வென்றனர்.
 கோல்வ் போட்டியில் 2 தங்கங்கள்
பெண்களுக்கான கோல் போட்டியில் இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
கோகர்ணா வன கோல்வ் புற்தரையில் கடந்த நான்கு தினங்களாக நடைபெற்ற கோல்வ் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் தங்கத்தை க்றேஸ் யட்டவர வென்றதுடன் துஹாசினி செல்வரட்ணம் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
 golf-tania-grace-thuhasini
இப் போட்டியின் முதல் நாளன்று 18 குழிகளை 69 நகர்வுகளில் பூர்த்தி செய்ததன் மூலும் அரங்குக்கான சாதனையையும் க்றேஸ் புதுப்பித்தார்.
இதேவேளை பெண்களுக்கான அணிநிலை கோல்வ் போட்டியிலும் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இவ்வணியில் க்றேஸ், துஹாசினி, தானியா பாலசூரய ஆகியோர் இடம்பெற்றனர்.
இது இவ்வாறிருக்க ஆண்களுக்கான அணி நிலை கோல்வ் போட்டியில் இலங்கைக்கு வெண்கலம் கிடைத்தது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.