திருமதி உலக அழகியாக இலங்கை பெண் தேர்வு

0
57

2020ஆம் ஆண்டுக்கான திருமணமான உலக அழகி கீரிடத்தை இலங்கையைச் சேர்ந்த கெரோலின் ஜுரி வென்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியிலேயே அவர் இந்த கீரிடத்தை தனதாக்கிக் கொண்டார்.

35 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு இந்த கீரிடம் கிடைத்துள்ளது.

27 வயதான கெரோலின் ஜுரி ஒரு குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

_110041412_mrsworldfacebookpageஇந்த போட்டியின் இரண்டாவது இடத்தை அயர்லாந்து பெற்றுக் கொண்டதுடன், மூன்றாவது இடத்தை அமெரிக்காவின் வேஜின் தீவுகள் பெற்றுக் கொண்டுள்ளது.

51 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இந்த முறை திருமணமான உலக அழகி போட்டிக்காக பிரசன்னமாகியிருந்தனர்.

joi9i98இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த கெரோலின் ஜுரி வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளார்;.

திருமணமான உலக அழகி போட்டியில் இலங்கை 1984ஆம் ஆண்டு முதலாவது தடவையாக கீடத்தை பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேன்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ரோசி சேனாநாயக்க இந்த கீரிடத்தை தனதாக்கிக் கொண்டார்.

திருமணமான உலக அழகி போட்டியில் இலங்கை இதுவரை இரண்டு தடவைகள் கீரிடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் மேயராக ரோசி சேனாநாயக்க தற்போது பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

FB_IMG_15757015843669699

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.