முகநூலில் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து: கைதான நபரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

0
72

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின்  பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படத்துடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்தொன்றினை முகநூலூடாக பிரசுரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான இளைஞர் ஒருவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு மேலதிக நீதிவான், யூ.பி.ஆர். நெலும்தெனிய பேலியகொடை பொலிஸாருக்கு இன்று அனுமதியளித்தார்.

பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட, களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரையே இவ்வாறு தடுத்து வைத்து விசாரிக்க நீதிவான் பொலிஸாருக்கு அனுமதியளித்தார்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.