மேலிருந்து பறந்து வந்து விழுந்த குழந்தை.. அப்படியே அலேக்காக பிடித்து.. காப்பாற்றிய பொதுமக்கள்!

0
75

அந்தரத்தில் பறந்து வந்து விழுந்த குழந்தையை.. அப்படியே அலேக்காக பிடித்து பத்திரமாக காப்பாற்றி உள்ளனர் பொதுமக்கள். ஒரு வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. டையூ-டாமனில் ஒரு குடியிருப்பில் இந்த சம்பவம் போன ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.

அங்கிருக்கும் வீடு ஒன்றில் 3-வது மாடியில் 2 வயது குழந்தை ஒன்று விளையாடி கொண்டிருக்கிறது. பிறகு திடீரென தடுமாறி 2-வது மாடியில் உள்ள ஜன்னலில் சிக்கி கொண்டு, அப்படியே அந்தரத்தில் தொங்கியது. இதனை கீழே இருந்தவர்களில் சிலர் கவனித்து பதறினர்..

எப்படியும் அந்த குழந்தை விழுந்துவிடும் என்று நினைத்து, குழந்தையை லாவகமாக பிடிக்க தயாரானார்கள்.. குழந்தை மாடியில் எங்கு சரியாக விழுமோ, அந்த இடத்தில் வந்து தயாராக நின்றுகொண்டனர்.

எதிர்பார்த்தபடியே குழந்தை தவறி விழுந்தது. விழுந்த குழந்தையை அலேக்காக பிடித்து காப்பாற்றி விட்டனர். குழந்தைக்கு ஒரு சின்ன காயம்கூட இல்லை.. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. பறந்து வந்து கீழே விழும் குழந்தையை பதறியடித்து கொண்டு மக்கள் தாங்கி பிடிக்கும் இந்த பதைபதைப்பு வீடியோதான் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.