காத­லுக்கு இடை­யூ­றாக இருந்த காத­லியின் 10 வயது மகனை நஞ்­சூட்­டி ­கொல்ல முயன்ற நபர் கைது

0
162

தங்கள் காத­லுக்கு இடை­யூ­றாக இருந்த  காத­லியின் பத்து வயது மகனை நஞ்­சூட்டி  கொலை செய்ய முயற்­சித்த  நபரொருவரை கொத்­மலை  பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தேகநபரை நேற்று நாவ­லப்­பிட்டி நீதிமன்ற நீதவான் சாந்­தினி மீகொட முன்னிலையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து எதிர்வரும் 6ஆம் திகதி வரை அவரை விளக்கமறி­யலில் வைக்­கு­மாறு நீதவான் உத்­த­ர­விட்டார்.

மேற்­படி சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

சந்­தேகநப­ரான 30 வயது இளை­ஞனும்  இறம்­பொடை கெரண்­டி­யெல்ல பிர­தே­சத் தைச் சேர்ந்த நஞ்­சூட்­டப்­பட்ட சிறு­வனின் 40 வயது  தாய்க்கும் சில­கா­லங்­க­ளுக்கு முன்னர் பஸ்ஸில் பய­ணித்த சந்­தர்ப்­பத்தில் அறி­முகம் ஏற்­பட்­டுள்­ள­துடன் பின்னர் அது காத­லாக மாறி­யுள்­ளது.

இந் நிலையில் சந்­தேகநபரின் காத­லி­யான குறித்த பெண்ணின் மூன்று பிள்­ளை­களில் இரண்டு பெண் பிள்­ளைகள் திரு­ம­ண­மாகி சென்­றி­ருந்த நிலையில் குறித்த சிறுவன் தாய் தந்­தை­யுடன் வசித்து வந்­துள்­ள­தோடு சிறு­வனின் தந்தை வேலைக்கு சென்ற பின்னர் அவனின் தாய் சந்­தேக நபரை அடிக்­கடி  வீட்­டுக்கு வர­வ­ழைத்து    உல்­லா­ச­மாக இருந்து வந்­துள்­ள­தா­கவும் இந்நிலையில்  தாங்கள் உல்­லா­ச­மாக இருப்­ப­தற்கு  குறித்த சிறுவன் இடை­யூ­றாக இருந்­த­மை­யினால் சம்­ப­வ­ தி­ன­மான கடந்த மாதம் 8ஆம் திகதி சந்­தேகநபர் சிறு­வ­னுக்கு வலு­க்கட்­டா­ய­மாக நஞ்சை ஊட்­டி­யுள்ளார். பின்னர் குறித்த சிறுவன் முதலில் கொத்­மலை வைத்­தியசாலையில் அனு­ம­திக்கப்பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக கம்­பளை வைத்­தியசாலைக்கு மாற்­றப்­படு அங்கு மேற்­கொண்ட தீவிர சிகிச்­சையின் பின்னர் சிறுவன் குண­ம­டைந்­துள்ளான்.

மேற்­படி சம்­ப­வத்­தை­ய­டுத்து சிறு­வனின் தாயும் சந்­தேகநபரும் தலை­ம­றை­வாகி இருந்த நிலையில் சில தினங்­க­ளுக்கு முன்னர் தாய் மீண்டும் வீட்­டுக்கு வந்த சந்­தர்ப்­பத்தில் பொலிஸார் அவ­ரிடம் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தான் கட்டு­கஸ்­தோட்டை  பிர­தே­சத்தில் மறைந்­தி­ருந்­த­தா­கவும் சந்­தேகநபர் அபே­வெல பட்டி பொல பகு­தியில் தலை­ம­றை­வாக இருப்­ப­தா­கவும் தெரி­வித்­த­தை­ய­டுத்து கொத்­மலை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி எச்.ஏ. பிரே­ம­லாலின் ஆலோ­ச­னைக்­க­மைய கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பட்­டி­பொ­லைக்குச் சென்ற பொலிஸ் குழு­வினர் சந்­தேகநபரை கைது செய்து  விசா­ர­ணையின் பின்னர் நீதவான் முன்னிலையில் நிறுத்­திய பொழுதே மேற்­கண்ட உத்­த­ர­வினை நீதவான் பிறப்­பித்தார்.

மேலும், சிறு­வ­னுக்கு எவ்­வ­கை­யான நஞ்சு ஊட்­டப்­பட்­டுள்­ளது என்­ப­ தனை அறிந்து கொள்­வ­தற்­காக சிறு­வனால் வெளியேற்றப்பட்ட வாந்தியின்    மாதிரிகள் இரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு எதிர் வரும் 6ஆம் திகதி சந்தேகநபரை அடை யாள அணிவகுப்புக்கு உட்படுத்தவும் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.