பெடரருக்கு சுவிஸ் அரசாங்கம் கொடுத்த நம்ப முடியாத கெளரவம்!

0
109

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் வீரரான ரோஜர் பெடரரை கெளரவிக்கும் வகையில் அந் நாட்டு அரசாங்கம் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றியொன்றை வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் 20 ஃப்ரேங்க் என்ற வெள்ளி நாணயக் குற்றியிலேயே இவ்வாறு அவரது முகம் பொறிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி குறித்த நாணயம் புலக்கத்திற்கு விடப்படவுள்ளது.

இதன்மூலம் ரோஜர் பெடரர் சுவிஸ் நாணயங்களில் பொறிக்கப்பட்ட முதல் உயிருள்ள நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இந்த நம்ப முடியாத கெளரவத்துக்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்குத பெடரர்  தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

38 வயதான ரோஜர் பெடரர் 20 முறை கிராண்ட் சிலாம் எனப்பெறும் பெருவெற்றித் தொடர்களை வென்றுள்ளதன் மூலம் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் வீரர்களுள் மிக அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற புகழுக்குரியவராவார்.

LEAVE A REPLY

*