வடக்கு ஆளுநராக முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க முயற்சி

0
85

 

வடக்கு மாகாண ஆளுநராக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனைய 6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவன் உள்ளிட்ட மூவரின் பெயர்கள் வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கான பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களில் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனே தமது முதல் தெரிவாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் சிறிலங்காவின் 44 ஆவது தலைமை நீதியரசராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.