வவுனியா விபத்தில் இளைஞன் பலி

0
95

வவுனியா புளியங்குளத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் ஏ9 வீதியில் நின்ற மாட்டுடன் மோதியுள்ளனர்.

DSC05949இதன்போது தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் எதிரில் வந்த பேரூந்துடன் மோதியுள்ளனர்.

இதன் காரணமாக வத்தளையை சேர்ந்த 21 வயதுடைய கிருபாகரன் துஸ்யந்தன் பலியானதுடன்  அவருடன் பயணித்த ரஞ்சித்குமார் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DSC05937இதேவேளை இளைஞர்களின் மோட்டார் சைக்கிளில் மோதுண்ட மாடும் உயிரிழந்துள்ளது.

அண்மைய நாட்களில் கட்டாக்காலி கால்நடைகளுடன் மோதுண்டு விபத்துகள் இடம்பெற்ற சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.