ஸ்கூட்டியில் சென்ற ‘பெண்’ ஆசிரியரை மோதி.. இழுத்துச்சென்ற லாரி.. பதறவைக்கும் ‘சிசிடிவி’ காட்சிகள்!

0
91

கடந்த திங்கட்கிழமை தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவரை அரசு பேருந்து மோதி இழுத்துச்சென்ற காட்சிகள் அனைவரையும் பதற செய்தது. இந்தநிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது.

கடந்த புதன்கிழமை ஹைதராபாத் பகுதியில் உள்ள ராதிகா சிக்னல் என்னும் இடத்தில் ஸ்கூட்டியில் சென்ற பெண் ஆசிரியரை, டிப்பர் லாரி ஒன்று மோதி இழுத்து சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.

போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் சரிதா என்பதும் ஏபிபிஐஐசி காலனியில் வசித்து வந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது. வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.