“பொள்ளாச்சியில் நடந்ததற்கு பசங்க மட்டுமே காரணம் இல்லை”: கே.பாக்கியராஜ் சர்ச்சை கருத்து

0
39

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றங்களுக்கு “பசங்க மட்டுமே காரணமில்லை” என்று பேசி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் இயக்குநர் – நடிகர் கே.பாக்யராஜ்.

“கருத்துகளை பதிவு செய்” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், இயக்குனர் பாக்கியராஜ் பேசிய கருத்துகள் சர்ச்சை ஆகியுள்ளன. “இதுவரை நான் என் கருத்துகளை” துணிச்சலாகப் பதிவு செய்துளேன் என தன் உரையை ஆரம்பித்து தான் எழுதிய கதைகளையும் அவர் சொன்னார்.

“யாரும் தவறாக நினைக்கக் கூடாது, நான் இதுவரை எடுத்த திரைப்படங்களில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, பெண்களுக்கு ஆதரவும் அளித்து வருகிறேன். ஏனென்றால் நான் கூட்டுக் குடும்பத்தில் இருந்து வந்துளேன்.

அதனால் பெண்களின் மனநிலையை நன்கு அறிவேன். இப்படித்தான் இருக்க வேண்டும் என கட்டுப்பாட்டுடன் பெண்கள் இருந்தவரை எல்லாம் நன்றாக இருந்தது. தற்போது இந்த டெலிஃபோன் வந்த பிறகு கட்டுப்பாடுகள் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது” என்று பேசினார் பாக்கியராஜ்.

“இதை சொல்வதற்கே கடினமாகத் தான் இருக்கிறது, ஆனால் தற்போது எல்லா இடங்களிலும் பெண்கள் தொலைபேசியுடனே காணப்படுகிறார்கள்.

நானே என் கதையில் எழுதி இருந்தேன். அந்த கதையில் வரும் கதாநாயகன் சிம் கார்டுகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவான். ஏனென்றால் ஒரு முறை பேசிய பெண்ணிடம் மற்றொரு முறை மாட்டிவிடக்கூடாது எனவும், நான் சிம் கார்டை மட்டும் தான் மாற்றுகிறேன். ஆனால் பெண்கள் இரண்டு அல்லது மூன்று ஃபோன்களை வைத்து கொண்டு மாற்றி மாற்றி பயன்படுத்துகிறார்கள் என கதாநாயகன் அந்த கதையில் கூறுவான்” என்று தான் எழுதிய ஒரு கதையையும் அவர் விவரித்தார்.

இந்த ’கருத்துகளை பதிவு செய்’ திரைப்படத்திலும் எவ்வாறு ஒரு பெண் சென்று மாட்டிக்கொள்கிறார் என காட்டப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

_109908518_14520532_1782505055358676_9154940638425389393_nமேலும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பட்டிமன்றத்தில் ”ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது” என கூறி இருந்தேன். இதை கேட்க வேடிக்கையாக இருந்தாலும், உண்மை இது தான். பெண்கள் நீங்கள் இடம் கொடுப்பதால் தான் தவறு நடப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது, எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெறுமனே பசங்களை மட்டும் தப்பு சொல்லாதீர்கள்” என தன் சொந்த பாணியில் பேசி அரங்கில் இருந்தவர்களிடம் கைத்தட்டலும் பெற்றார்.

“திருவள்ளுவர் கற்பு குறித்து யாருக்கு எழுதினார்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார். “ஆண்கள் தவறு செய்தால் அது போகிறபோக்கில் சென்று விடும். அனால் பெண்கள் தப்பு செய்தால் மிகப்பெரிய தப்பாக மாறிவிடும். செய்தித்தாள்களில் சில செய்திகளைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆண்கள் சின்ன வீடு வைத்திருந்தால், அவன் என்ன வேண்டுமோ அதை சின்ன வீட்டுக்கு செய்து விடுவான். காசு பணம் என எல்லாமே கொடுப்பான். ஆனால் பெரிய வீட்டையும் டிஸ்ட்டர்ப் பண்ணமாட்டான்.

ஆனால் செய்தித் தாளில் நீங்கள் பார்க்கலாம், கள்ளக் காதலனுக்காக கணவனை கொன்றுவிட்டார்கள், குழந்தையை கொன்றுவிட்டார்கள் என செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட செய்திகள்தான் பெண்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. சுய கட்டுப்பாடு வேண்டும் என்றும் உணர்த்துகிறது.

பொள்ளாச்சி பற்றி

“பொள்ளாச்சியில் தவறு நடந்ததற்கு பசங்க மட்டுமே காரணம் இல்லை” என்று கூறிய பாக்கியராஜ் பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி பெண்களை கொண்டுபோய்விட்டார்கள் என்றும் தெரிவித்தார். “அவன் செய்தது தவறு என்றால், அதற்கான வாய்ப்புகளை பெண்கள் நீங்கள் கொடுத்துவிட்டீர்கள்” என்றும் அவர் கூறினார்.

மற்றொரு கதை

தன் பேச்சில் அவர் இரண்டாவதாக ஒரு கதையும் சொன்னார்.

”இருவர் காதலிப்பார்கள், இரண்டு தரப்பினர் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு நிலவும். எனவே இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து தனியாக ஒரு இடத்திற்கு செல்வார்கள். தற்கொலை செய்ய மருந்துகளை தயார் செய்யும்போது கதையில் வரும் காதலன் நாம் இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என நினைத்தோம், ஆனால் நம் வீட்டார் நம்மை வாழ விடவில்லை. தற்போது அவர்களால்தான் நாம் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுளோம். ஏன் இறப்பதற்கு முன்பு நாம் சந்தோஷமாக இருந்துவிட்டு சாகக்கூடாது என கதையில் வரும் பையன் கேள்வி கேட்கிறான்.

அதற்கு அந்த கதையில் வரும் பெண் சிரித்துவிட்டு, தான் வைத்திருக்கும் ஒரு கடிதத்தை எடுத்து தன் காதலனை படிக்க சொல்லுவாள். அது அந்த பெண் தன தந்தைக்கு எழுதிய கடிதம்.

‘நான் ஏதோ வயசு கோளாறுல, வேறேதோ ஆசையில், இந்த பருவத்தில் ஏதோ தவறு செய்துவிட்டு, காதலித்து ஓடி வந்துவிட்டேன். உங்கள் மானத்தை கெடுத்துவிட்டு வந்துவிட்டேன் என நினைகீறிர்கள், அது தவறு. இப்போது நான் ஒன்றை தெளிவு படுத்துகிறேன். சாகும்போதும் உங்கள் மகளாகத்தான் சாகிறேன்’ என்று அந்த கடிதத்தில் எழுதி இருப்பாள்.

இதைப் படித்தவுடன் அந்த காதலனுக்கு கண் கலங்கும். இதை மீறி அவனால் தவறு செய்யமுடியாது. எனவே அவன் தன் காதலியிடம் மன்னிப்பு கேட்பான். பிறகு மற்றொரு மன்னிப்பும் இவர்களுக்கு கேட்கும்.

என்னவென்று பார்த்தால், அந்த இடத்திற்கு இருவரின் பெற்றோரும் வந்து இந்த கதையை கேட்டிருப்பார்கள். பிறகு பெற்றோர்களே இவர்களின் காதலைப் புரிந்துகொண்டு இருவரையும் சேர்த்து வைப்பார்கள். இப்படி பக்குவமாக நடந்துகொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள்” என்று தனது கதையைக் கூறி விவரித்தார் பாக்கியராஜ்.

_109908310_gettyimages-1176568636செல்பேசி பயன்பாடு

மேலும் செல்போன் பயன்பாடு குறித்துப் பேசிய பாக்கியராஜ், “இந்த விஞ்ஞான உலகில் ஒரு தந்தை தன் மகளின் பாதுகாப்புக்குதான் மொபைல் வாங்கித் தருகிறார். ஆனால் பெண்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் தனியாக சென்று ரகசியமாக யாருடனோ பேசுவது, பிரச்சனைகளுக்கே வழிவகுக்கும். எனவே இந்த பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வு தேவை.

திரைப்படத்தில் எல்லா நல்ல குணங்களுடன் ஹீரோ சித்தரிக்கப்படுகிறான். ஆனால் உண்மையில் நிஜ வாழ்வில் அவ்வாறு யாரும் இருப்பதில்லை. திரைப்படத்தைப் போல நிஜ வாழ்விலும் நல்ல குணங்களுடன் வாழ்ந்தவர் என்றால் எம் ஜி ஆரை சொல்லலாம். மேலும் நம்பியார் திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர்; நிஜ வாழ்வில் ஹீரோவாகத் திகழ்ந்தார்.

எந்த ஊரில் இருந்தாலும், நம்பியாருக்கு அவரது மனைவிதான் உணவு சமைத்துக் கொண்டுவந்து பரிமாருவார். நம்பியாரும் முதலில் தன் மனைவிக்கு ஒரு வாய் ஊட்டிவிட்ட பிறகு தான், தான் உண்ணுவார்.

எனவே திரைப்படத்தில் வில்லனாக நடித்தாலும், நிஜ வாழ்வில் ‘குருசாமி’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு சிறந்து வாழ்ந்தவர்கள் உள்ளனர். இவ்வாறு பெண்களை மதிக்கும் ஆண்களும் உள்ளனர். பெண்களும் நான் சொன்னதுபோல இயற்கையாகவே மிகவும் இளகிய சுபாவம் உள்ளவர்கள். காதலிப்பவர்கள் அனைவரும் தவறு செய்தவர்கள் இல்லை. நாம் நம் கட்டுப்பாட்டில் இருப்பது மிகவும் அவசியம்” என்றார்.

இந்த திரைப்படத்தில் மொபைல் பயன்பாட்டால் ஏற்பட்ட பதிப்புகள் குறித்து மிகவும் அழகாக காட்டியுள்ளனர். கண்டிப்பாக இது மக்கள் மத்தியில் பேசப்படும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.