புத்தளத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து – நால்வர் காயம்

0
32

புத்தளம்- குருநாகல் பிரதான வீதியில், மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் அடங்கலாக நால்வர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

img_20191119_152459புத்தளம் நோக்கிப் பயணித்த கெப் வாகன சாரதி நித்திரை கலக்கத்துடன் அதிக வேகத்தில் பயணித்துள்ள நிலையில், எதிரே வந்த கெப் வாகனம் மற்றும் வேன் என்பவற்றுடன் மோதுண்டுள்ளார்.

img_20191119_151851இதனையடுத்து, குறித்த வாகனங்களில் பயணித்தவர்கள் படுகாயமடைந்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.