ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்

0
38

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அநுராதபுரம் ருவன்வெலிசாயவில் நடைபெற்ற வைபவத்தில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆவார்.

 

கோட்­டா­பய ராஜ­பக்ஷ, டி.ஏ.ராஜ­பக்ஷ மற்றும் டந்­தினா ராஜபக் ஷஆகி­யோரின் மக­னாக 1949 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20 ஆம் திகதி வீரக்­கெட்­டி­யவில் பிறந்தார்.

தனது பாட­சாலைக் கல்­வியை ஆனந்தா கல்­லூ­ரியில் பெற்­றுக்­கொண்ட கோட்­டா­பய ராஜ­பக் ஷ கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் தகவல் தொழில்­நுட்­பத்தில் பட்­டப்­ப­டிப்பை நிறைவு செய்தார்.

family-gr

அவர் அனோமா ராஜ­பக்ஷவை திரு­மணம் செய்து கொண்­ட­துடன், அவர்­க­ளுக்கு மனோஜ் என்ற மகன் உள்ளார்.

இலங்கை இரா­ணு­வத்தில் கடற் அதி­கா­ரி­யாக 1971 ஆம் ஆண்டில் இணைந்­து­ கொண்ட கோட்­டா­பய ராஜ­பக் ஷ, லெப்­டினன்ட் கேர்ணல் தரம் வரை உயர்த்­தப்­பட்டு 20 வரு­ட­காலம் இரா­ணு­வத்தில் பணி­யாற்­றினார். 1992 ஆம் ஆண்டில் இரா­ணு­வத்­தி­லி­ருந்து ஓய்­வு­பெற்று அமெ­ரிக்­கா­வுக்குச் சென்று அவ­ரது குடும்­பத்­தி­ன­ருடன் வசித்­து­வந்தார்.

 

meetings_08_11_2019பின்னர் 2005 ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் அர­சாங்­கத்தில் பாது­காப்புச் செய­லா­ள­ராகப் பொறுப்­பேற்­றுக்­கொண்டு 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி வரை அப்­ப­த­வியை வகித்தார்.

EJdpiBtU4AA4fA0

இந்­நி­லையில் இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் ஏழா­வது நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வ­தற்­கான எட்­டா­வது ஜனா­தி­பதித் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் சார்பில் கோட்­டா­பய ராஜபக் ஷவேட்­பா­ள­ராகக் கள­மி­றக்கப்­பட்டார்.

3559131400_1a97f03c94_n

அவர் கடந்த 16 ஆம் திகதி சனிக்­கி­ழமை நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­யீட்டி, இலங்­கையின் ஏழா­வது நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­ப­தி­யாக இன்று திங்­கட்­கி­ழமை சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொள்­ள­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த வைபவம் இன்று பிற்­பகல் 2 மணிக்கு அநு­ரா­த­புரம் ருவன்­வெ­லி­சாய – மஹா­ம­லு­வவில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்த நிகழ்வில் எதிர்க்­கட்சி தலை­வரும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ, கட்­சியின் போசகர் பசில் ராஜபக் ஷஉள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொள்­ள­வுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.