நீ ‘போடவே’ வேணாம்.. பூசணிக்காய்களாக உடைந்து ‘சிதறும்’ ஹெல்மெட்கள்!-VIDEO

0
168

கடந்த மாதம் நாடு முழுவதும் பேசுபொருளாக இருந்தது ஹெல்மெட் தான். அதோடு சேர்த்து போக்குவரத்து போலீசார் வசூலித்த அபராதமும் சிலருக்கு கண்முன்னே வந்து போகலாம். மனதை திடமாக்கி கொண்டு இந்த  செய்தியை மேலே படியுங்கள்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் போக்குவரத்து போலீசார் ரோட்டில் நின்று கொண்டு பைக்கில் செல்வோரின் ஹெல்மெட்களை வாங்கி தூக்கி போடுகின்றனர்.

முதலில் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் இது என்ன அராஜகம் என்று நினைக்கலாம்.ஆனால் உண்மை அதில்லை.

அவர்கள் அணிந்து வந்த ஹெல்மெட்கள் அனைத்தும் வெறுமனே தலையை மறைக்கும் வகையில், தரமில்லாததாக உள்ளன.

இதனால் போலீசார் அந்த ஹெல்மெட்களை வாங்கி தூக்கி போடுகின்றனர். மேலோட்டமாக பார்த்தால் இது சரியாக தோன்றினாலும், வாகன ஓட்டிகளிடம் இருந்து ஹெல்மெட்டினை   வாங்கி உடைப்பது தவறு என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

நீங்க என்ன நெனைக்கிறீங்க?

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.