சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில்..முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் வேறு

0
52

டெல்லி: அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வில் உள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்தது தவறு, இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் தரலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அயோத்தி வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும்.

எந்த அமைப்பு அந்த நிலத்திற்கு உரிமை கோர முடியும் என்பதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம்.
இந்த சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் கூரியது.

இதை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச நீதிமன்றம் சென்றனர்.

இதன் மீதான விசாரணை நடந்து வந்தது அயோத்தி வழக்கு தொடர்பான 14 மேல்முறையீட்டு மனுக்கள், மற்றும் புதிய மனு ஒன்று ஆகியவற்றின் மீதான விசாரணை நடந்து வந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.

அயோத்தி வழக்கில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சமரசம் தோல்வியில் முடிந்தது.

சமரச முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக மூவர் குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை மிகவும் விறுவிறுப்பாக சென்றது. அனைத்து தரப்பும் தினமும் வாதங்களை வைத்தனர். விடுமுறை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

பல்வேறு புதிய ஆதாரங்கள், வாதங்கள் இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் தங்கள் தரப்பு வாதங்களை வைத்தனர்.

இதனால் கடைசி கட்டத்தில் இந்த வழக்கு சூடு பிடித்தது. மொத்தம் 40 நாட்கள் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அயோத்தி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளனர். அயோத்தி வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கினார்கள்.

அரசியல் சாசன அமர்வில் உள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கினார்கள். இவர்களின் சார்பாக தலைமை நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.

அதில், அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும். ஷியா அமைப்பின் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

நிலத்திற்கு உரிமை கோரிய ஷியா அமைப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.ஒரு மதத்தினரின் நம்பிக்கை அடுத்த மதத்தின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்க கூடாது. மத உரிமை என்பது அடிப்படை உரிமை.

நீதிமன்றம் நடுநிலையை காக்கும் பொறுப்பில் இறுகியது . அயோத்தி நிலத்திற்கு உரிமை கோரும் நிர்மோகி அகார மனுவில் உண்மை இருப்பதாகவும், ஆதாரம் இருப்பதாகவும் தெரியவில்லை.

அதனால் நிலத்திற்கு உரிமை கோரும் உரிமை அந்த அமைப்பிற்கும் இல்லை. மதச்சார்பின்மையே அரசியல் சாசனத்தின் அடிப்படை பண்பு. அமைதியை காக்கவும், பாதுகாப்பை பராமரிக்கும் வகையிலும் அயோத்தி தீர்ப்பை ஏற்க வேண்டும்.

காலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. ஏற்கனவே அங்கே ஒரு கட்டிடம் இருந்தது. பாபர் மசூதியின் கீழ் பகுதியில் இருக்கும் பழைய அமைப்பு இஸ்லாமிய முறைப்படி இல்லை.

அங்கிருக்கும் பழைய கட்டிடம் இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை.பாபர் மசூதிக்கு முன்பாக அந்த இடத்தில் என்ன கோவில் இருந்தது என்பதை நிரூபிக்கவில்லை.

இந்த கோவில் இடிக்கப்பட்டதா என்றும் நிரூபிக்கவில்லை. கீழே இருக்கும் கட்டிடத்தை வைத்து நில உரிமையை மொத்தமாக வழங்க முடியாது.

அங்கு இந்து கோவில் இருந்ததாக நீதிமன்றத்தில் நிரூபித்தாலும் நில உரிமையை வழங்க முடியாது. மத மற்றும் நம்பிக்கை அடிப்படையில் நிலம் குறித்த தீர்ப்பு வழங்க முடியாது.

சட்ட விதிகளின்படியே இதில் தீர்ப்பு வழங்க முடியும். இசுலாமியர்கள் அந்த நிலத்தின் உட்பகுதியில் தொழுகை செய்தது வந்தது நிரூபணம் ஆகிறது. அதேபோல் வெளிப்பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.

தடங்கல்கள் இருந்தாலும் இஸ்லாமியர்கள் வெளிப்பக்கத்தில் வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.

அவர்கள் மசூதியை விடவில்லை. அதேபோல் இந்துக்கள் ராமர், அயோத்தியில் நிலத்தின் உட்பகுதியில் பிறந்ததாக நம்புகிறார்கள்.

அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்களை தவிர்த்துவிட்டு இஸ்லாமியர்கள் மட்டுமே வழிபாடு செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

1992ல் உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறி பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்கிறது. 1949ல் விதியை மீறி மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

அலஹாபாத் நீதிமன்றம் அயோத்தி நிலத்தை மூன்றாக பிரித்தது தவறு. இஸ்லாமியர்களுக்கு தனி இடம் அளிக்கலாம்.

அங்கு அவர்கள் மசூதி கட்ட அனுமதி அளிக்கலாம், மசூதி கட்ட சன்ன வக்ஃபு வாரியத்திற்கு மாற்று நிலம் வழங்கலாம். 5 ஏக்கர் நிலத்தை வழங்கலாம். சர்ச்சைக்குரிய இடம் ராம் ஜென்ம பூமி நியாசுக்கு சொந்தம்.வஃக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய, உத்தர பிரதேச மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கிறோம். சர்ச்சைக்குரிய இடத்தில் ராம் ஜென்ம பூமி நியாசு ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம்.

அங்கு கோயில் கட்டுவதற்கு அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும்.அயோத்தியில்ல் கோவில் கட்ட 3 மாதங்களில் மத்திய அரசு ஒரு திட்டத்தை உருவாக வேண்டும், என்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.