திருச்சி சிறையில் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டு கைதிகள் விசம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி

0
55

தமிழ்நாட்டின் திருச்சி மத்திய சிறையில் இலங்கை தமிழர்கள் உட்பட உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட  வெளிநாட்டு கைதிகள் 40 விசம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்;ளது.

திருச்சி மத்திய சிறையில் வெளிநாட்டவர்களிற்கான சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டு கைதிகளே தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இந்த முகாமில் உள்ள 46 கைதிகள் தங்களிற்கு  தண்டனை காலம் முடிவடைந்ததால் தங்கள் தங்கள் நாடுகளிற்கு அனுப்பிவைக்குமாறு  அதிகாரிகளை கோரிவருகின்றனர்.

எனினும் அவர்களை சொந்த நாடுகளிற்கு அனுப்பிவைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி நேற்று திடீர் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர்.

நேற்று முதல் உணவை தவிர்த்த இவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில் இன்று காலை இந்த கைதிகளில் 26 பேர் விசம் குடித்ததாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து அவர்களைஅதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் கைதிகளிற்கு விசம் எப்படி கிடைத்தது அவர்கள் எந்த வகை விசத்தை பயன்படுத்தினர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

*