களைப்பில் காரின் மீது அமர முயன்ற யானை (காணொளி இணைப்பு)

0
268

தாய்லாந்து நாட்டில் காவோ யாய் தேசிய பூங்காவில் அமைந்துள்ள தானாரத் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்த போது பூங்காவில் இருந்த டியூவா என்ற ஆண் யானை (வயது 35) காரை வழிமறித்துள்ளது.

இதன் போது காரின் மீது யானை ஏற முயன்ற நிலையில்,  காரின் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சிக்கும்பொழுது, குறுக்கே சென்ற யானை தனது உடலை காரின் மீது வைத்து அமருவதற்கு முயன்றது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  காரின் பின்புற ஜன்னல், மேற்கூரை மற்றும் நடுப்பகுதி ஆகியவை சேதமடைந்தன.

இது குறித்து  பூங்கா இயக்குனர் சரீன் பவான் கூறும்பொழுது, ஈரப்பதம் மற்றும் குளிர்கால சூழலில் சுற்றுலாவாசிகளை வரவேற்கவே டியூவா வெளியே வந்துள்ளது.  அந்த நடுத்தர வயதுடைய யானை யாரையும் அல்லது எந்த வாகனங்களையும் துன்புறுத்துவது கிடையாது என கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருப்பதற்காக சுற்றுலாவாசிகள் தங்களது கார்களை யானைகளிடம் இருந்து 30 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தி விடுங்கள் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.