டெல்லியின் வளிமண்டல மாசு இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

0
20

கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் சில பகுதிகளில் வளிமாசு ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் மற்றும் காலநிலை அவதான மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மோசமான வளிமாசுவின் காரணமாக இலங்கையில் இந்த தாக்கம் உருவாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த சில தினங்களாக  கொழும்பில் பனிமூட்டம் போன்ற காலநிலை காணப்படுகின்ற நிலையில் இது குறித்து  இதற்கு சூழல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் கொழும்பு நகரிலுள்ள வலிமண்டலமானது நூறு சதவீதம் மாசடைந்து காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் டெல்லி மற்றும் சில மாநிலங்களில்  ஏற்பட்டுள்ள காற்று மாசுபடுதலின் காரணமாக மேற்படி நிலைமை கொழும்பில் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர்ரம் மூத்த விஞ்ஞானியுமான  சரத் பிரேமசிறி, வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்த நிலைமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இது மக்களுக்கு சுவாச நோய்களை உருவாக்கும் என்ற காரணத்தினால்  சுவாச நோயாளர்களை அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.