தித்திக்கும் தீபாவளித் திருநாள்… வழிபட வேண்டிய தெய்வங்கள்… சிறப்புகள்!

0
158

முன்பெல்லாம் வீட்டில் பெரியவர்கள் ஒரு பண்டிகையின் முக்கியத்துவத்தைச் சொல்லி அந்த நாளில் கொண்டாட்டங்களோடு கொண்டாட்டமாக தெய்வ வழிபாட்டையும் இணைத்து செய்யச் செய்வார்கள். ஆனால், அவசர யுகம். சிலர் பண்டிகைகளை வெறும் விடுமுறை தினமாகவே பார்க்கிறார்கள். ஆனால் பண்டிகைகள் தனித்துவமானவை.

தீபாவளி உற்சாகமாகப் பிறந்துவிட்டது. அதிகாலை ஆனந்தமான எண்ணெய்க்குளியல், பளபளக்கும் புத்தாண்டை, ருசிக்கத் தூண்டும் இனிப்புகள், ரசிக்கத்தூண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று களைகட்டத் தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் பெரியவர்கள் ஒரு பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி அந்த நாளில் கொண்டாட்டங்களோடு கொண்டாட்டமாக தெய்வ வழிபாட்டையும் இணைத்து செய்யச் செய்வார்கள். ஆனால், அவசர யுகம். சிலர் பண்டிகைகளை வெறும் விடுமுறை தினமாகவே பார்க்கிறார்கள். ஆனால் பண்டிகைகள் தனித்துவமானவை. அந்த நாளில் இறையருள் கிடைப்பது மிகவும் சுலபம்.

dipavaliதீபாவளித்திருநாளை பஞ்சாங்கத்தில் ‘நரக சதுர்த்தசி’ என்று குறிப்பிட்டிருப்பார்கள். நரகாசுரனை வதம் செய்த நாள் ஐப்பசி சதுர்த்தசி திதி. தீமை அழிந்து நன்மை பிறந்த நாள். இந்த நாளில் அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும் என்ற நியமத்தைப் பெரியவர்கள் ஏற்படுத்தினர். அன்று அதிகாலை நேரத்தில் எண்ணெயில் லட்சுமியும் நீரில் கங்கையும் வாசம் செய்வதாய் ஐதிகம்.

லட்சுமிதேவியின் திருவருள் வேண்டாதவர்கள் இந்த உலகத்தில் இல்லை. மேலும் அன்றாடம் நாம் செய்யும் பாவங்களைத் தீர்க்க கங்கையே நம் வீட்டில் இருக்கும் தீர்த்ததில் எழுந்தருளி அருள் செய்கிறாள் என்பது நம்பிக்கை. இப்படி தெய்வங்கள் வீடுதேடிவந்து அனுக்கிரகம் செய்யும் அற்புதத் திருநாளாக தீபாவளி அமைந்திருக்கிறது. இவை மட்டுமல்லாது அன்றைய நாளில் வழிபட வேண்டிய முறைமையையும் வகுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

vikatan_2019-05_83b4c551-f947-469d-be1e-a3b83c4958a2_102450_thumbகிருஷ்ணாவதாரத்தின் நோக்கமே தீமையை அழித்து நன்மையை வாழவைப்பதுவே என்கின்றன புராணங்கள். அவ்வாறு தீயசக்தியான நரகாசுரனை அழிக்கக் காரணமாகத் திகழ்ந்தார் பகவான் கிருஷ்ணர். இந்த நாளில் கிருஷ்ண பகவானை மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டியது அவசியம். வேணுகோபாலனாகப் பெருமாள் கோயில்கொண்டிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வாழ்வில் உள்ள தீமைகள் மறையும் என்பது ஐதிகம்.

சிவபெருமான் பார்வதி தேவியின் தவத்துக்கு மகிழ்ந்து அன்னையைத் தன் ஒரு பாகமாக ஏற்ற தினமும் இதுவே. அம்பிகை பூமிக்கு வந்து 21 நாள்கள் கேதாரம் என்னும் தலத்தில் தவமியற்றி சிவனின் அருளைப் பெற்றாள். சிவனும் அம்பிகையைத் தன் பாகமாக ஏற்று அர்த்தநாரியாக அருள்பாலித்த இந்த தினத்தில் சிவபெருமான் வழிபாடும், அம்பாள் வழிபாடும் அனைத்துவிதமான நன்மைகளையும் அருளும். பிரிந்திருக்கும் தம்பதிகள் இந்த நாளில் சிவபெருமானை நோன்பிருந்து வழிபட வேற்றுமைகள் மறைந்து ஒன்றுபடுவர் என்கின்றன சாஸ்திரங்கள்.

vikatan_2019-07_cc06e13c-9a17-4dd9-a9db-e383f2fe4b77_Shiva_1_19392இந்த நாளில் மாலையில் லட்சுமி குபேர பூஜை செய்வது விசேஷம். பாற்கடலில் இருந்து அன்னை மகாலட்சுமி வெளிப்பட்டு நாராயணரை தன் துணையாக ஏற்ற நன்னாளும் இதுவே என்று சொல்லப்படுகிறது. நாள் முழுவதும் விரதமிருந்து லட்சுமி – குபேர பூஜை செய்துவழிபடவேண்டும். வட இந்தியாவில் இந்த நாளில் தொழில் தொடங்குபவர்கள் புதுக்கணக்குப் போடுவது புதியதொழில் தொடங்குவது ஆகியன வற்றை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ராவண வதம் முடிந்து ராமபிரான் அயோத்தி திரும்பியது ஒரு தீபாவளித் திருநாளிலே என்கின்றன புராணங்கள். அதன்பின் பல ஆயிரம் ஆண்டுகள் ராமபிரான் அயோத்தியில் நல்லாட்சி புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நாளில் ராமபிரானை வழிபட்டால் அவரின் கருணைக்குப் பாத்திரமாகி நல்லருளைப் பெறலாம்.

vikatan_2019-05_60accd49-074e-4ed6-96f9-df65d5074017_94590_thumbதேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியவர், தன்வந்திரி பகவான். ஆயுர்வேத மருத்துவம் போற்றும் தன்வந்திரி அவதரித்ததும் தீபாவளித் திருநாளிலே என்கின்றன புராணங்கள். அதனால்தான் தீபாவளி அன்று நீராடியதும் முதன் முதலில் மருந்தான லேகியம் உண்ணவேண்டும் என்கிறது ஆயுர்வேதம். தீபாவளி நாளில் தன்வந்திரியை வழிபட்டால் நோயற்ற வாழ்க்கை அமையும், தீராத நோய்களும் குணமடையும் என்பது ஐதிகம்.
தீபாவளி சில சுவாரஸ்யமான தகவல்கள்

தமிழகத்தில் ஒருநாள் பண்டிகையாகக் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாள் வட இந்தியாவில் ஐந்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. ‘தந்தேரஸ்’ எனப்படும் உலோகத் திருவிழா, சின்ன தீபாவளி என்னும் நரக (நாக) சதுர்த்தசி, பெரிய தீபாவளி, மில்னி எனப்படும் கோவர்த்தன பூஜை, பையா தோஜ் எனப்படும் சகோதரிகளைக் கொண்டாடும் திருவிழா என்று ஐந்து நாள்களும் கொண்டாட்டம் தான்.

vikatan_2019-10_adbe702d-ea7d-4acf-b210-9b655a9c1b83_danvantri* தீபாவளியன்று காசியில் ஒரு கரத்தில் தங்கக் கரண்டியும், இன்னொரு கரத்தில் தங்கக் கிண்ணமும் ஏந்தி பிரகாசத்துடன் காட்சி தருவாள், அன்னபூரணி. அதுபோல், தங்கத்தாலான காலபைரவர் உற்சவர் விக்கிரகம் தீபாவளி நாளன்று மட்டும் பவனி வருவது சிறப்பு.

* தீபாவளிக்கு அடுத்த நாள் கோவர்த்தனகிரி பூஜை நடத்தப்படுகிறது.

* கயிலாய மலையில் தீபாவளியன்று சிவபெருமானும் பார்வதி தேவியும் சொக்கட்டான் ஆடுவார்கள் என்பது ஐதிகம். அதனால், இதனைப் போற்றும்விதமாக குஜராத் மாநில மக்கள் தீபாவளி இரவில் சொக்கட்டான் ஆடும் பழக்கத்தை இன்றும் கடைப்பிடிக்கின்றனர்.

* தீபாவளியன்று திருவரங்க நாதருக்கு எண்ணெய்க் காப்பிட்டு, திருமஞ்சனம் செய்து, புதிய ஆடைகள் அணிவித்து அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கு ‘ஜாலி அலங்காரம்’ என்று பெயர்.

* தீபாவளியை ஒட்டி பத்து தினங்கள் மட்டுமே திறந்திருக்கும் ஆலயம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹசனாம்பா ஆலயம். இங்கு எழுந்தருளியிருக்கும் அம்மனை வழிபாடு செய்வது சிறப்பானதாகும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.