யாழில் தனிமையில் வசித்த பெண் கொலை

0
32

கோண்டாவில், நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலடியில் தனிமையில் வசித்த பெண் ஒருவர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

61 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு இன்று (21) காலை வீட்டு வளவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தக் கொலை நேற்று (20) இரவு இடம்பெற்று இருக்கலாம் தெரிவிக்கும் பொலிஸார், கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.