மொடர்ன் ஆடை அணிய மறுத்ததால் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவன்: பொலிஸாரிடம் பெண் முறைப்பாடு

0
45

தான் மொடர்ன் ஆடைகளை அணியவும் மதுபானங்களை அருந்தவும் மறுத்ததால், தனது கணவன் தன்னை முத்தலாக் முறையில் விவகாரத்துச் செய்துள்ளார் என இந்தியாவின் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பீஹார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்த நூரி பாத்திமா எனும் பெண்ணே தனது கணவர் இம்ரான் முஸ்தபாவுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

இவர்களுககு 2015 ஆம் திருமணம் நடந்தது. சில பின்னர் இவர்கள் இடம் பெயர்ந்தனர்.

இது தொடர்பாக நூரி பாத்திமாக கூறுகையில்,

“டெல்லிக்குச் சென்ற சில மாதங்களின் பின்னர், டெல்லியில் உள்ள ஏனைய நவீன யுவதிகள் போன்று நானும் இருக்க வேண்டும் என அவர் கூறினார். நான் சிறிய ஆடைகளை அணிய வேண்டும் என அவர் கூறியதுடன், இரவு விருந்துகளுக்குச் செல்லவும் மது அருந்தவும் வேண்டும் எனக் கூறினார்.நான் அவற்றுக்கு மறுப்புத் தெரிவித்தேன். அவர் தினமும் என்னை தாக்கினார்.

பல வருடங்கள் சித்திரவதை செய்த பின்னர், என்னை வீட்டை விட்டுச் செல்லுமாறு சில தினங்களுக்கு முன்னர் கூறினார். அதற் நான் மறுத்தபோது எனக்கு முத்தலாக் கொடுத்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

பீஹார் மாநிலத்தின் பெண்கள் ஆணைக்குழுவின் தலைவர் தில்மாணி மிஷ்ரா இது தொடர்பாக கூறுகையில், “இக்கணவர் இரு தடவைகள் கருக்கலைப்பு செய்யவும் நிர்ப்பந்தித்துள்ளார். செப்டெம்பர் 1 ஆம் திகதி அவர் முத்தலாக் கொடுத்துள்ளார். இக்கணவருக்கு நாம் அறிவித்தல் கொடுத்துள்ளோம். அவரை நாம் விசாரணைக்கு அழைப்போம்”  எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.