மான்செஸ்டர் வணிக வளாகத்தில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி- கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் காயம்

0
24

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரின் ஆர்ன்டேல் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட முயன்றார் என்ற சந்கேத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நபர் ஒருவர் வணிகவளாகத்திற்குள் பாரியகத்தியால் தாக்குதலை மேற்கொண்டதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

பிரிட்டனை சேர்ந்தவர் என கருதப்படும் நபர் வணிகவளாகத்தில் காணப்பட்டவர்கள் மீது தாக்குதலை நடத்தினார் என காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த ஆயுதமேந்தாத காவல்துறையினரையும்; குறிப்பிட்ட நபர் கத்தியால் குத்த முயன்றார் அவர்களை துரத்த முயன்றார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

imageமுதலில் சாதரண தாக்குதல் முயற்சி என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவரை கைதுசெய்தோம்,தற்போது அவரை பயங்கரவாத தாக்குதல் முயற்சி என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்துள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலிற்கான காரணம் தெரியவில்லை ஆனால் இது ஈவிரக்கமற்றதாகவும் நேரில் பார்த்தவர்களிற்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும்; காணப்பட்டது என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

19 வயது யுவதி உட்பட இரு பெண்களும் 55 வயது ஆணும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வணிக வளாகம் காணப்படும் பகுதியில் ஆயுதமேந்திய அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டுள்ளதையும்,நபர் ஒருவரை காவல்துறை அதிகாரியொருவர் டேசரை பயன்படுத்தி நிலத்தில் வீழ்த்தி மடக்கி பிடிப்பதையும் காண்பிக்கும் படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகியவண்ணமுள்ளன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.