சிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன் – ஸ்ருதிஹாசன்

0
73

சிறந்த காதலை தேடிக்கொண்டிருக்கிறேன். அது வரும்போது ‘இதற்காகத்தான் காத்திருந்தேன்’ என உலகத்திற்கு அறிவிக்க காத்திருக்கிறேன்” என நடிகை ஸ்ருதி ஹாசன் தெரி­வித்­துள்­ளார்.

கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், நடிகை, பின்னணி பாடகர், இசையமைப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ருதி, அதன் பிறகு பிஸியாக நடித்து வந்தார்.

haasan-683x1024விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ருதி, தனக்கென ஒரு பெரிய ரசிகர்பட்டாளத்தையே உருவாக்கினார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வந்தார்.

இந்நிலையில் நடிப்பில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொண்டார்.

ஒரு சிறிய இடை­வேளை தேவைப்படுவதால் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருப்பதாக ஸ்ருதி தெரிவித்தார்.

எனவே ‘சங்கமித்ரா’ உள்ளிட்ட படங்களில் இருந்து அவர் விலகினார்.

haasan-4-730x1024ஸ்ருதியின் இந்த முடிவுக்கு பின்னால் ஒரு காதல் கதை இருக்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகர் மைக்கேல் கார்சேல்  என்பவரை ஸ்ருதி காதலித்து வந்தார்.

இருவரும் சேர்ந்தே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். கமலையும் கூட மைக்கேல் கார்சேல் சந்தித்தார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

மைக்கேல் கார்சேலும், ஸ்ருதியும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறுப்பட்டது. ஆனால், இருவரும் திடீரென பிரேக் அப் செய்துவிட்டனர்.

இதனை மைக்கேல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். ஸ்ருதியும், தனது சமூக வலைதளப்பக்கத்தில் இருந்து மைக்கேலின் புகைப்படங்களை நீக்­கி­னார்.

அவர்களது காதல் ஏன் முறிந்தது என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில் மைக்கேல் கார்சேலுடன் பிரேக் அப் செய்தது ஏன் என முதல் முறையாக மனம் திறந்துள்ளார் ஸ்ருதி.

இதுகுறித்து தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் மிகவும் கூல். எமோஷனலான நபரும் கூட. எனக்கு அது ஒரு நல்ல அனுபவம். இது ஒன்றும் சினிமா காதல் இல்லை”, என கூறியுள்ளார்.

மேலும், “இப்போதும் என்னிடம் எந்த பார்முலாவும் இல்லை. நல்லவர்கள் நன்றாகத் தான் நடந்துகொள்கின்றனர், சிலசமயங்களில் தவறும் செய்கின்றனர்.

இதற்கு நான் வருத்தப்படவில்லை. ஒரு சிறந்த காதலை தேடிக்கொண்டிருக்கிறேன்.

அது வரும்போது ‘இதற்காகத்தான் காத்திருந்தேன்’ என உலகத்திற்கு அறிவிக்க காத்திருக்கிறேன்”, என்றும் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.