ரஜினி வீட்டில் நவராத்திரி கொண்டாட்டம்…… பிரபலங்கள் பங்கேற்பு

0
281

நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் வீட்டில் எடுக்கப்பட்ட நவராத்திரி கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

நடிகர் ரஜினிகாந்தின் மகள்களான சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் வீட்டில் நவராத்திரி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்காக தங்களின் சிறுவயது தோழிகளான, நடிகர் விஜயகுமாரின் மகளும் இயக்குநர் ஹரியின் மனைவியுமான பிரித்தாவையும் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியான வந்தனாவையும் அவர்கள் நவராத்தியின் 6வது நாளில் தங்களின் வீட்டிற்கு அழைத்து கொண்டாடி உள்ளனர்.

rajaniiபிரபலங்கள்

நான்கு பேரும் கண்கவர் பட்டுப்புடவையில் தோன்றினர். நவராத்திரி விழாவில் கலந்துகொள்ள வீட்டிற்கு வந்த பிரித்தாவையும் வந்தனாவையும் நடிகர் ரஜினிகாந்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் வரவேற்றனர்.

நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு ரஜினிகாந்த் வீடு முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மேலும் நவராத்திரி விழாவில் பங்கேற்க ரஜினியின் வீட்டிற்கு வந்த பிரித்தா வந்தனா ஆகியோர் ரஜினியுடனும் லதா ரஜனிகாந்துடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

*