பயத்திலேயே வாழ்கிறேன் – நயன்தாரா பேட்டி

0
131

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா, தான் பயத்திலேயே வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தான் நடிக்கும் படத்தில் எந்தவொரு இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே கலந்து கொள்ளமாட்டார்.

ஆனால், தன் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், நயன்தாரா பேட்டி என்பது அரிதினும் அரிதானது.

சமீபத்தில் இவரை பற்றி ராதாரவி பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதுவே, அவர் வெளியிட்ட கடைசி அறிக்கையாகும். தன்னை பற்றி எந்தவொரு செய்திக்கும் அவர் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமுமே வராது.

தற்போது நீண்ட வருடங்கள் கழித்து, பிரபல ஆங்கில இதழான ‘வோக்‘ இதழுக்கு பேட்டி அளித்துள்ளார் நயன்தாரா.

அதிலும் ஒரு சாதனை செய்துள்ளார். என்ன என்றால், தென்னிந்திய நாயகிகளில் இவரது புகைப்படம் மற்றும் பேட்டி தான் முதன் முதலில் ‘வோக்‘ இதழில் இடம்பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக தன்னை முன்னிலைப்படுத்தி வரும் கதைகளிலும், நாயகியாகவும் நடித்து வருவது குறித்து, “ஏன் இன்னும் சில நாயகர்களின் படத்தில் கவர்ச்சியான கதாநாயகியாக நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

சில நேரங்களில் வேறு வழி இல்லை. எவ்வளவு நாட்கள் தான் முடியாது என்று என்னால் சொல்ல முடியும்.

நான் ரிஸ்க் எடுக்கத் துணிபவள்” என்று தெரிவித்துள்ளார் நயன்தாரா. முன்னணி நாயகியாக இருப்பது குறித்த கேள்விக்கு, “வெற்றியை என் தலைக்கேற விட மாட்டேன்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் எப்போதுமே ஒரு பயத்தில் இருக்கிறேன். சரியான படத்தை கொடுக்கமாட்டேனோ என்ற பயத்திலேயே வாழ்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.