14 C
Zurich, CH

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ; மீள் திருத்தம் செய்விரும்புவோருக்கான அறிவித்தல்

0
75

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தத்துக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டிருந்தன.

ALபெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk என்ற முகவரியில்  பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பை சுற்றியுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் நாளைய தினம் காலை 9 மணிமுதல் திணைக்களத்துக்கு வந்து பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பரீட்சை பெறுபேறுகளில் மீள் திருத்தம் செய்விரும்புபவர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை வரை அதற்காக பாடசாலை அதிபர் ஊடாக மேன் முறையீடுசெய்யலாம்.

அதுதொடர்பான மேலதிக விபரங்களுக்கு திணைக்களத்தின் 011-2784208, 0112- 2784537, 011- 3188350 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.