பிக் பாஸ் சீசன் 3 ஃபினாலே: லொஸ்லியா குறித்த கமலின் கவிதை, படவாய்ப்பை பெற்ற தர்ஷன் – முக்கிய தருணங்கள்

0
143

சென்னை: பிக்பாஸ் சீசன் 3யின் டைட்டில் வின்னரானார் முகென். பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் முகெனின் கையை உயர்த்தி வின்னராக அறிவித்தார் நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசன்.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. முதலில் 15 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் இரண்டு நாள் கழித்து நடிகை மீரா மீதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

அவரை தொடர்ந்து சில வாரங்கள் கழித்து நடிகை கஸ்தூரி வைல்டு கார்டு என்ட்ரியாகவும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட வனிதா மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகவும் உள்ளே நுழைந்தனர்.

xbb65745-1570298450.jpg.pagespeed.ic.b_FESeyURn
இந்த நிகழ்ச்சியில் வாரம் தோறும் சக ஹவுஸ்மேட்களால் அதிகம் நாமினேட் செய்யப்படும் நபர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்று மக்களின் ஓட்டு அடிப்படையில் வாரம் தோறும் ஒருவர் வெளியேற்றப்பட்டார். மிகக் குறைந்த வாக்குகளை பெறும் நபர் வெளியேற்றப்பட்டு வந்தார்.

தன்படி பல்வேறு திருப்பங்களுடன் பல போட்டியாளர்கள் எதிர்பாராதவிதமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பலரின் வெளியேற்றம் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது.

xmugen54-1570387026.jpg.pagespeed.ic.J1QOEkTtGJகடைசியாக முகென், சாண்டி, ஷெரின், லாஸ்லியா ஆகியோர் ஃபைனலுக்கு தகுதி பெற்றனர். 100 நாட்கள் கடந்த நிலையில் கடந்த ஒருவாரமாக அந்த 4 பேரும் மக்களின் வாக்குகளுக்காக காத்திருந்தனர்.

ஓட்டுப்பதிவு வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று மாலை பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வின்னராக முகென் அறிவிக்கப்பட்டார். கமல்ஹாசன், அலங்கார சாரட் வண்டியில் முகென் மற்றும சாண்டியை அழைத்து வந்தார்.

இதனைத்தொடர்ந்து சாண்டியின் கையை ஒரு பக்கமும் முகெனின் கையை ஒரு பக்கமும் பிடித்துக் கொண்டிருந்த கமல், பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் முகெனின் கையை தூக்கி வின்னர் என அறிவித்தார்.

முகென் வெற்றியாளரகாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரங்கத்தில் குவிந்திருந்த மக்கள் கரகோஷத்தால் ஆரவாரம் செய்தனர்.

முகென் பிக்பாஸ் சீசன் 3யின் டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறார். மலேசிய பாடகரான முகென், சினிமாவில் சாதிக்க வேண்டும் வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தார். அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதை வென்ற முகென், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார்.

முகென் வெற்றி பெற்றதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டைட்டில் வின்னரான முகெனுக்கு பிக்பாஸ் ட்ரோஃபியும் 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்:Bigg Boss Tamil Grand Finale 06-10-2019 Vijay Tv Show

LEAVE A REPLY

*