நிபந்தனைகள் இன்றி கோத்தாபயவிற்கு ஆதரவு சிறிசேன தீர்மானம்

0
87

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்தவித நிபந்தனைகளும் இன்றி பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தெரிவித்துள்ளார்.

பொதுஜனபெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரிடம்  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு இடம்பெற்;ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

எந்த வித நிபந்தனைகளையும் விதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி எனினும்  இரு தரப்பிற்கும் இடையில் கைச்சாத்;திப்படவுள்ள உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் மிரிஹான இல்லத்தில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.