தாய்லாந்து: மூன்று வயது குட்டி யானையைக் காப்பாற்ற ஐந்து யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து பலி – உருக்கமான நிகழ்வு

0
104

தாய்லாந்தில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆறு யானைகள் உயிரிழந்துள்ளன.

ஒன்றோடு ஒன்றைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்ததில் அந்த யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்துவிட்டன.

தாய்லாந்தின் மத்திய பகுதியில் உள்ள கா யே தேசிய பூங்காவில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்ததையடுத்தே இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாறையின் ஓரத்தில் தடுமாறிக் கொண்டிருந்த இரு யானைகள் தற்போது அதிகாரிகளால் மீட்கப்பட்டுவிட்டன.

_109114458_dc67a73a-135d-42f7-8d2f-f007be6dbdd2ஹா நரோக் (நரக வீழ்ச்சி) என்று பெயரிடப்பட்ட நீர் வீழ்ச்சியில் இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

1992ஆம் ஆண்டில் எட்டு யானைகள் விழுந்து உயிரிழந்தது தாய்லாந்தில் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றது.

நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள சாலையை யானைகள் மறித்துள்ளதாகச் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

மூன்று மணி நேரம் கழித்து 3 வயது யானையின் உடல் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அதே இடத்திற்கு அருகில் 5 யானைகளின் உடல்களும் இருந்தன.

_109115790_e37544ca-5a36-4446-8207-b94d653e20afமீதமுள்ள இரண்டு யானைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்த தேசிய பூங்காவின் தலைவர் கஞ்சித் ஸ்ரீனொப்பவன் பிபிசியிடம் தெரிவித்தார்.

அந்த இரண்டு யானைகளை மன ரீதியாகவும் இந்த சம்பவம் பாதிக்கும்.

“இது பாதி குடும்பத்தை இழப்பது போன்று” என்று தாய்லாந்து வனவிலங்குகள் அமைப்பின் நிறுவனர் எட்வின் வீக் தெரிவித்தார்.

“இதற்கு ஒன்றும் செய்ய முடியாது. இது இயற்கை” என்கிறார் அவர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.