பாரிஸில் கத்தியால் குத்தப்பட்டு 4 பொலிஸார் கொலை!

0
117

 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள காவல் துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 4 அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் 2015-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதல்கள் நடத்தினர். அதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

19254568-7533375-image-m-50_1570110304159தாக்குதல் நடத்திய 7 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளாவது தொடர்கிறது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள காவல்துறை தலைமை அலுவகத்தில் அங்கு வேலை பார்க்கும் நபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தினார்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 அதிகாரிகள் உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.