”என் மகன் கஞ்சா பாவிக்காமல் இருக்கமாட்டான். அவன் மீதுள்ள பாசத்தினாலேயே இதை கொண்டு வந்தேன்”

0
145

சிறைக் கைதிக்கு கஞ்சாவை கொண்டு சென்ற குறித்த கைதியின் தாயைக் கைது செய்த பொலிசார் அவரை வெள்ளவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நிலையில் நீதிபதி அவரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

வெள்ளவாய நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி மகேஸ் வாகீச முன்னிலையில் மேற்படி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி குறித்த உத்தரவைப் பிறப்பித்தார்.

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் தொடர்பான வழக்கு வெள்ளவாய நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று  ஆஜர் செய்யப்பட்டிருந்தார். இதன்போது குறித்த இளைஞனை சந்திக்க சென்றிருந்த போது குறித்த தாய் பொலிசாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டார். இந்த சோதனையின் போது அப் பெண்ணின் தலைமுடிக் கொண்டையில் மறைத்து வைத்திருந்த கஞ்சா பக்கட் ஒன்றை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

அக் கஞ்சா பக்கட் 30 கிராம் எடையுள்ளதென்று பொலிசார் தெரிவித்தனர். அப் பெண் விசாரணைக்குற்படுத்தப்பட்டதும் தனது மகன் கஞ்சா பாவிக்காமல் இருக்கமாட்டான். அவன் மீதுள்ள பாசத்தினாலேயே இக் கஞ்சா பக்கட்டைக் கொண்டு வந்ததாகவும் அப்பெண் தெரிவித்ததாக பொலிசார் கூறினர்.

அப்பெண் அன்றைய தினமே வெள்ளவாயா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததும் நீதிபதி அப்பெண்ணை எதிர்வரும் 3 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.