நிர்வாண மசாஜ் பண்ணனும்’… ‘மாதவிடாய்’ன்னு சொன்னாலும் விடமாட்டாரு’…மாணவியின் அதிரவைக்கும் வாக்குமூலம்!

0
888

பாஜக தலைவரும் மத்திய முன்னாள் இணை அமைச்சருமான சின்மயானந்தா, தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும் ஒரு வருடமாக உடல்ரீதியாக துன்றுபுறுத்தினார் என்று, சட்டக்கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சின்மயானந்தா தன்னை எவ்வாறு எல்லாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என்பது குறித்து மாணவி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். அது தி பிரிண்ட் இணைய இதழில் வெளியாகியுள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள மாணவியின் வாக்குமூலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது ” முதல் முறையாக அவரது அறைக்கு நான் அழைத்து செல்லப்பட்டேன்.

உடனே தனது அருகில் அமருமாறு சொன்னார். படிப்பிற்காக பலமுறை அவரை சந்தித்திருக்கிறேன்.

இதனால் அவர் மீது எனக்கு தனி மரியாதை இருந்தது. இதையடுத்து தனது செல்போனை எடுத்து அதனை பார்க்குமாறு கூறினார்.

அதனை பார்க்கும் போது நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். அதில் நான் நிர்வாணமாக குளித்த வீடியோ ஓடி கொண்டிருந்தது. உடனே நான் அழ ஆரம்பித்தேன். ஆனால் அவரோ மகிழ்ச்சியில் சிரித்து கொண்டிருந்தார்.

இந்த வீடியோவை வெளியில் விட கூடாது என்றால், என்னுடைய தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் இந்த வீடியோ எங்கும் செல்லாது. இல்லையென்றால் வீடியோ வைரலாகும், அதோடு உனது குடும்பத்தையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்.

பிறகு நிர்வாணமாக ஆயில் மசாஜ் செய்ய சொன்னார். நான் முடியாது என கூறினேன். உடனே என்னை அடித்து துன்புறுத்தினார். அதே போன்று தினமும் காலை 6 மணிக்கு நிர்வாண மசாஜ் செய்ய வேண்டும்.

இதனிடையே மதியம் 2.30 மணி வந்து விட்டால் போதும், துப்பாக்கி ஏந்திய சின்மயானந்தாவின் பாதுகாவலர்கள் எனது விடுதி அறைக்கு வந்து விடுவார்கள். அவர்கள் என்னை சின்மயானந்தாவின் தனிமையான அறைக்கு கொண்டு சென்று விடுவார்கள்.

அங்கு அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்வார். எனக்கு மாதவிடாய் என்று சொன்னால் கூட கேட்கமாட்டார்.

நரக வேதனையை அனுபவித்து வந்த எனக்கு அதிலிருந்து விடுபட பலரிடமும் சென்று நடந்ததை கூறினேன்.

ஆனால் யாரும் என்னை நம்பவில்லை. ஆதாரம் கேட்டார்கள். அவர் உன்னை மகளே என்று அழைக்கிறார். அவர் எப்படி இவ்வாறு நடந்து கொள்வர் என கூறினார்கள்.

இந்த சூழ்நிலையில் தான் அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முடிவு செய்தேன்.

இதற்காக கூகுளில் தேடிய போது தான், ரகசிய கேமரா குறித்து தெரிந்து கொண்டேன். பேனா, மூக்குக்கண்ணாடி போன்றவற்றில் இருக்கும் ரகசிய கேமரா குறித்து தெரிந்து கொண்டேன்.

இதையடுத்து மூக்குக்கண்ணாடியை ஆன்லைனில் ஆர்டர் செய்தேன். ஏனென்றால் மூக்குக்கண்ணாடியை தவிர வேறு எந்த பொருட்களையும் அவரது அறைக்கு கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.

இதையடுத்து ஆவர் எனக்கு செய்த கொடுமைகளை வீடியோ எடுத்தேன். அதன் பிறகு தான் எனக்கு தைரியமே வந்தது.

வீடியோ உட்பட சில ஆதாரங்களை திரட்டிய பின்பு விடுதியில் இருந்து தப்பி சென்றேன்” என சட்ட கல்லூரி மாணவி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மாணவி அனுபவித்த கொடுமைகள் குறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.