வார ராசிபலன் – செப்டம்பர் 23 முதல் 29 வரை

0
267

இந்த வார ராசிபலன் செப்டம்பர் 23 முதல் 29 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி.

mesha_19339மேஷராசி அன்பர்களே!

வார முற்பகுதியில் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்குச் சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் மூலம் உடனே சரியாகி விடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். அதிகாரிகள் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவார்கள்.

வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

கலைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

மாணவர்களுக்குப் படிப்பதில் ஆர்வம் குறையக்கூடும். பெற்றோரின் ஆலோசனை கேட்டு அதன்படி நடப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்களுக்குச் சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நாள்கள்: 23, 28

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்

பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி

குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்

பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

rishaba_19447ரிஷபராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திருமண வயதில் உள்ள பெண் அல்லது பிள்ளைக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருந்தாலும் கூடுமானவரை விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் செலவுகளும் ஏற்படக்கூடும்.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஒரு சிலருக்குப் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் சாத்தியமுண்டு. சிலருக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும்.

வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், அனுபவம் மிக்கவர்களிடம் ஆலோசனை கேட்டுச் செய்யவும்.

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பதற்கும், அதன் மூலம் பணவரவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு. சக கலைஞர்கள் விமர்சித்தாலும் பொருட்படுத்தவேண்டாம்.

மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது அவசியம். நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை. ஆசிரியர்களின் அறிவுரையின்படி நடப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 24, 25

அதிர்ஷ்ட எண்கள்:2, 6

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந்

தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை

வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்

ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.

mithuna_19054மிதுனராசி அன்பர்களே!

பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடந்த சில நாள்களாகக் கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களும் அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்களும் உறவினர்களும், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். அவர்களால் எதிர்பாராத பணவரவும் கிடைக்கக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் உற்சாகம் தரும்.

வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு புதுப்புது வாய்ப்புகளும் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவர்கள் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது அவசியம். பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 23, 27

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்

காதலால் கூப்புவர் தம்கை

kadaga_19268கடகராசி அன்பர்களே!

பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் வருகை ஆதாயமும் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் ஈடுபடச் சாதகமான வாரம்.

அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். நல்ல வேலை கிடைக்கக்கூடும். பணியிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவு படுத்துவீர்கள். சக வியாபாரிகளால் ஏற்பட்ட மறைமுக இடையூறுகள் விலகும்.

கலைத்துறையினருக்கு சிற்சில தடை தாமதங்களுக்குப் பிறகே எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.

மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவியையும் ஆசிரியர்கள் தருவார்கள். பெற்றோர் அனுசரணையாக இருப்பார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலைசெய்யவேண்டியிருக்கும். ஆனாலும், சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நாள்கள்: 24, 25, 29

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்

முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்

அருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

simma_19535சிம்மராசி அன்பர்களே!

வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. மற்றவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வழக்குகளில் நிதானமான அணுகுமுறை அவசியம். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்கமுடியாது.

வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்கள் உங்களுடைய முயற்சிகளுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

கலைத்துறையினர் வாய்ப்புகளைப் பெறக் கடுமையாகப் பாடுபடவேண்டிவரும். ஆனால், அதற்கேற்ற வருமானம் கிடைப்பதால் சோர்வு மறைந்து உற்சாகம் ஏற்படும்.

மாணவர்கள் உற்சாகமாகப் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்குப் படிப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லவேண்டி இருக்கும். அதனால் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்..

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நாள்கள்: 23, 27

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலைப் பாராயணம் செய்யவும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்

kanni_19112கன்னிராசி அன்பர்களே!

பணவரவுக்கு குறைவிருக்காது. சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பைக் கரைக்கும். சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். பயணங்களின்போது கொண்டு செல்லும் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். தாயாரின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் வீண் குழப்பங்கள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் உங்களின் ஆலோசனைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். அதன் காரணமாக சில சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் கௌரவம் உயரும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் விற்பனையை அதிகரிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும். வருமானமும் கூடுதலாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சக கலைஞர்கள் உதவி செய்வார்கள்.

மாணவர்கள் படிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவர். அதன் காரணமாக தேர்வு களில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குச் சற்று பொறுப்புகள் கூடுவதால் சோர்வு உண்டாகும். பணவரவு திருப்தி தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 23, 24, 25, 28, 29

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றிக் கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈச னெந்தை யிணையடி நீழலே.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.