10 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது இளைஞர்…வைரலான சர்ச்சை வீடியோ!

0
225

ஈரானில் 10 வயது சிறுமியை 22 வயது இளைஞர் திருமணம் செய்துகொண்டுள்ள வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில், பெண்கள் 13 வயதில் பெற்றோரின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அதை விட இளைய பெண்கள் ஒரு நீதிபதியின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளலாம்.

பிரித்தானிய மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் படி, ஈரானில் சுமார் 17 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர்.

“ஈரானிய சட்டம் ஆண்கள் தங்கள் மனைவியுடன், அவளது வயதைப் பொருட்படுத்தாமல், அவளுடைய அனுமதியின்றி பாலியல் நடத்தைகளில் ஈடுபட உரிமை உள்ளதாக கூறுகிறது.

ஆண்கள் தங்கள் குழந்தை மனைவிகளை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் அந்த சட்டம் கூறுகிறது”.

இந்த நிலையில் 10 வயது சிறுமியை 22 வயது இளைஞர் திருமணம் செய்துகொள்ளும் வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிறுமிக்கு 9 வயது முதல் 11 வயதிற்குள் இருக்கலாம் என கூறுகின்றனர்.

அந்த வீடியோ காட்சியில் “பாத்திமா, மிலாட் ஜஷானியை திருமணம் செய்ய நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று மதகுரு கேட்க, “என் பெற்றோரின் அனுமதியுடன், ஆம்.” என பதிலளிக்கிறார்.

மணமகனும் திருமணம் செய்துகொள்கிறேன் என பதில்கொடுக்க, அவர்களது குடும்பத்தினர் பாராட்டுவதும், உற்சாகப்படுத்துவதும், புதுமணத் தம்பதிகள் சிரிப்பதும் அவர்கள் கணவன் மனைவியாக மாறுகிறார்கள்.

இந்த திருமணம் ஈரான் குடும்பச் சட்டத்தின் 50 வது பிரிவை மீறியது, இது சட்டபூர்வமான வயதை எட்டாத ஒரு பெண்ணை மணக்கும் மனிதனுக்கு ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறுகிறது.

இதற்கிடையில் இந்த திருமணம் ரத்து செய்யப்படுவதாக உள்ளூர் அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும், மணமகன் மற்றும் மதகுரு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.