திருகோணமலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்பு

0
67

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இன்று(15) வயலுக்கு சென்ற ஒருவர் பொலிஸாருக்கு சடலம் காணப்பட்டதாக வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்..

IMG-20190915-WA0005இந்நிலையில் 43 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

கந்தளாய் பேராற்றுவெளி பகுதியிலே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும்,சடலம் இனம் காண முடியாத அளவுக்கு உருக்குழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

IMG-20190915-WA0007குறித்த நபர் மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் ஆற்றோர பற்றைக் காட்டுக்குள் சடலம் காணப்படுவதால் ஆணா பெண்ணா என இனங்காண முடியாத அளவுக்கு உருக் குலைந்துள்ளதாகவும், காட்டு உயிரினங்கள் உடல் பாகங்களை சாப்பிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இது கொலையா அல்லது தற்கொலை என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.