தங்க கழிவறைத் தொட்டி, பிரித்தானிய கண்காட்சியிலிருந்து திருடப்பட்டது

0
80

தங்கத்தால் செய்யப்பட்ட கழிவறைத் தொட்டியொன்று, பிரிட்டனின் கண்காட்சியொன்றிருந்து நேற்று திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
18 கரட் தங்கத்தால் உருவான இந்த கழிவறைத் தொட்டி முழுமையாக இயங்கக்கூடியது.

இத்தாலிய கலைஞர் மௌரிஸியோ இதை வடிவமைத்திருந்தார். இதன் பெறுமதி 10 இலட்சம் ஸ்ரேலிங் பவுணட்ஸ் (சுமார் 23 கோடி இலங்கை ரூபா, 9 கோடி இந்திய ரூபா) கடந்த வருடம் அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் இந்த கழிவறைத் தொட்டி பொதுமக்களின் பாவனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

கடந்த வாரம் லண்டனின் பிளெய்ன்ஹெய்ம் பலஸ் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பாவனைக்காக இந்த கழிவறைத் தொட்டி பொருத்தப்பட்டது.

 

முன்பதிவு செய்துகொண்டு 3 நிமிடங்கள் இதை பயன்படுத்த அனுமதி வழங்கப்பபட்டது.

எனினும், 2 நாட்களின்பின் – நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இக்கழிவறைத் தொட்டி திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு வாகனங்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், கழிவறைத் தொட்டியை அகற்றிச் செல்லும்போது கட்டடம் சேதமடைந்ததாகவும், வடிகாலமைப்புத் தொகுதி சேதமடைந்தால் வெள்ளம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.