மாமியாரின் சடலத்தை சுமந்து சென்ற நான்கு மருமகள்கள்!!

0
299

பெண்­ணொ­ரு­வரின் சட­லத்தை அவரின் நான்கு மரு­ம­கள்­மார்கள் இணைந்து சுமந்து சென்ற சம்­பவம் இந்­தி­யாவின் மஹா­ராஷ்­டிரா மாநிலத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

மஹா­ராஷ்­டி­ராவின் காஷிநாத் நகரைச் சேர்ந்த சுந்­தர்பாய் நைக்­வாடே எனும் 83 வய­தான பெண் அண்­மையில் கால­மா­னார்.

அவரின் இறு­திக்­கி­ரி­யை­யின்­போது பூத­வு­டலை மரு­ம­கள்­மார் நால்­வர் சுமந்து சென்­ற­னர்.

இப்­பெண்ணின் மகன்­மாரின் மனை­வி­ய­ரான லதா நைக்­வாடே, உஷா நைக்­வாடே, மேற்­படி மகன்­களின் ஒன்­று­விட்ட சகோ­தர­ர்களின் மனைவி­ய­ரான மனீஷா நைக்­வாடே மற்றும் மீனா நைக்­வாடே ஆகியோரே இந்த நான்கு மரு­ம­கள்­மார் ஆவர்.

Daughters-In-Law-Break-Norm-Carry-Mother-In-Laws-Body-For-Last-Rites_4சுந்­தர்பாய் நைக்­வாடே 4 மரு­ம­கள்­க­ளையும் மகள்­களைப் போலவே நடத்தி வந்­தார் என மேற்­படி மரு­ம­கள்­மார் தெரி­வித்­துள்­ள­னர்.

அவர் கண்­தானம் செய்­தி­ருந்த நிலையில் இறந்­த­வுடன் அவ­ரது ஆசைப்­ப­டியே கண்கள் தானம் செய்­யப்­பட்­டன.

தங்­களை மகள் போல் நன்கு கவ­னித்துக் கொண்ட மாமி­யா­ருக்கு இறு­தி­யாக ஏதா­வது செய்ய வேண்டும் என்று நினைத்த மரு­ம­கள்கள்,

இறந்­த­மா­மி­யாரின் உடலை மயானம் வரை சுமந்து சென்றனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

LEAVE A REPLY

*