கட்டிட கலையில் மிரள வைக்கும் கைலாசநாதர் கோவில்

0
206

அருள்மிகு கைலாச நாதர் கோவில் காஞ்சீபுரம் பஸ் நிலையத்திலிருந்து மேற்கே அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

அருள்மிகு கைலாச நாதர் கோவில் காஞ்சீபுரம் பஸ் நிலையத்திலிருந்து மேற்கே அமைந்துள்ளது.

கச்சபேசர் கோவில் அமைந்துள்ள வீதியின் வழியே சென்றால் எளிதில் இந்த கோவிலை அடையலாம்.

இந்த கோவில் அமைதியான, அழகான பச்சைப்பசேல் புல்வெளி களைக் கொண்டு ஊரின் இறுதியில் அமைந்துள்ளது. கிழக்குப் பார்த்தச் சந்நிதி.

இத்திருக்கோவில் 1. வெளிப்பிராகாரம், 2. உள்பிராகாரம், 3. மூலவர் கட்டிடப்பகுதி என மூன்று பிரிவாக அமைந்துள்ளது.

முதல் நுழைவு வாயில் கிழக்குப் பார்த்த வண்ணமும் மூலவர் அறைக்குச் செல்லும் வாயில் தெற்கு நோக்கியும் உள்ளது.

மூலவர் கைலாச நாதர், பெரிய 16 பட்டை லிங்கத் திருமேனி கொண்டு அருள் புரிந்து வருகிறார்.

சென்னைக்கு அருகே உள்ள திருநின்றவூரில் பூசலார் எனும் பெரியவர் தோன்றினார். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய இவர், அறவழியில் பொருள் தேடி சிவன டியார்களுக்கு உதவினார்.

இவர், இறைவனுக்கு கோவில் கட்ட ஆசைப்பட்டார். ஆனால் அவ ரிடம் அதற்கான பண வசதியே, பொருளோ இல்லை.

பணத்துக்காகப் பல இடங்களில் முயற்சி செய்தார், ஆனால் கிடைக்கவில்லை.

அதனால் மனம் வருந்திய அவர் தன் உள்ளத்திலேயே சிவபெருமானுக்குத் கோவிலைக் கட்டலாம் என்று முடிவு எடுத்தார்.

கல், சுண்ணாம்பு, சிற்பியார் எல்லாம் சேகரித்து, நாள் தோறும் ஒருபுறம் அமர்ந்து கண்களை மூடி மனதை ஒரு மனதாக்கி, மனதுக்குள்ளேயே திட்டம் தீட்டி கோவிலை கட்டினார்.

சுற்றுச் சுவர் மதில், கோபுரம், விமானம், மண்டபம், குளம், இறைவனுக்கான வாகனம், மூலவர், உற்சவர் எல்லாம் மனதுக்குள்ளேயே கற்பனையில் செய்து முடித்தார். இறுதியில் கும்பாபிஷேகம் நடத்தவதற்கும் நாள் குறித்தார்.

பூசலார் தேதி குறித்த அதே நாளில் காஞ்சீபுரத்தில் காடவர்கோன் என்னும் மன்னன் காஞ்சீபுரத்தில் சிவபெருமானுக்கு பெரும் பொருட் செலவில் கற் கோவில் கட்டி முடித்து குட முழுக்கிற்கு நாள் குறித்து முடித் தான்.

ஒருநாள் காடவர்கோன் கனவில் தோன்றிய சிவபெருமான் நீ குறித்த நாளில் திருநின்றவூரில் பூசலார் என்பவர் கோவில் எடுத்தக் குடமுழுக்கிற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

நாம் அங்கு செல்ல உள்ளோம். எனவே, நீ வேறு ஒருநாளில் கும்பாபிஷேகத்தை நடத்து என்று கூறினார்.

மன்னன் காடவர்கோன் கண்விழித்து கனவில் இறைவன் கூறியதை மீண்டும் ஒருமுறை நினைத்து, உடனே திருநின்றவூருக்கு பயணமானான்.

அங்கு பூசலார் கட்டிய கோவில் எங்கு உள்ளது என்பதை அறிய முடியாமல் குழம்பி, அங்கிருந்த மக்களிடம் கேட்டான்.

மக்கள் பூசலாரை காட்ட, மன்னன் பூசலாரிடம் சென்று தம் கனவில் இறைவன் கூறியதை சொன்னார்.

அதை கேட்டு பூசலார் மெய்சிலிர்த்து இறைவனின் கருணையை எண்ணி வியந்தார். உடனே பூசலார், தாம் இறைவனுக்குத் தம் மனதில் மட்டுமே கோவில் கட்டியதாகக் கூறினார்.

இதை அறிந்த மன்னன் இறைவனின் கருணையை வியந்து, திருநின்றவூரில் இறைவனுக்கு ஒரு கோவிலைக் கட்டி குடமுழுக்கும் செய்தான்.

அதன் பின்பு காஞ்சியில் தாம் கட்டிய கைலாநசாதருக்குக் குடமுழுக்கு செய்வித்தான் என்பது புராண வரலாறாகக் கூறுவர்.

இத்திருத்தலத்தில் நாரத மாமுனிவரும், திரு மாலும் சிவபெருமானை- கைலாச நாதரை வணங்கி உள்ளனர் இத்திருக்கோவிலில் இறைவன் எழுந்து அருள்புரியும் கருவறையைச் சுற்றிலும் சொர்க்கவாசல் என்னும் பிராகாரம் ஒன்று உள்ளது.

இவ்வாசலானது, நுழையும் இடமும் வெளிவரும் இடமும் குறுகிய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாசலின் வழியே சென்று வெளியே வந்தால் மறுபிறப்பு எடுத்ததற்கு சமம் என்கிறார்கள். கருவறையை சுற்றிலும் பல சிறிய கோவில்கள் உள்ளன.

பல்லவர் காலத்து கட்டிடக் கலைத்திறனுக்கு இக்கோவில் ஓர் உதாரணமாகும்.

இந்த ஆலயம் முழுக்க, ழுமுக்க மண் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள கோவில் ஆகும். தொல் பொருள் ஆய்வுத்துறையினரால் இந்த ஆலயம் நிர்வகிக்கப்படுகிறது.

காலை 8.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

LEAVE A REPLY

*