81 வயது முதியவராக விமானத்தில் பயணிக்க பக்கா பிளான்.. -வசமாக சிக்கிய வாலிபர்

0
206

டெல்லி விமான நிலையத்தில் 81 வயது முதியவரைப்போல வேடமிட்டு பயணிக்க நினைத்த வாலிபர், விமான நிலைய அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார்.

புது டெல்லி: அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் படேல்(32). இவர் நியூயார்க் செல்வதற்காக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். இவர் சென்ற விதம்தான் ஆச்சரியத்துக்குரியது.

இவர் நியூயார்க் பயணிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால், அம்ரிக் சிங் எனும் 81 வயது முதியவர் பெயரில் பாஸ்போர்ட் ஒன்றை போலியாக ஏற்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து தாடி, தலைமுடி என அனைத்தையும் 81 வயது முதியவர் போல தோற்றம் தெரிய வேண்டுமென வெள்ளை நிற டை அடித்துக் கொண்டார். மேலும் வீல் சேரில் வந்துள்ளார்.

201909100911424335_1_cisf._L_styvpfமத்திய தொழில்துறை பாதுகாப்பு படை

இவரது நடத்தையில் ஆரம்பத்தில் இருந்தே அங்கு சிறப்பு பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவரை சோதித்தனர். அதில், அவர் 32 வயதுடைய வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அவரது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வயதிற்கு சற்றும் பொருந்தாத வகையில் அவரது தோளின் தன்மை மிகவும் நன்றாக இருந்தது. 50 வயதைக் கூட தாண்டாத தன்மை கொண்டது.

மேலும் அவர் ஜீரோ பவர் கொண்ட மூக்கு கண்ணாடி அணிந்திருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர் ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டில் குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்’ என கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.