செக்­க­னுக்கு 15 ஆயிரம் லீற்றர் நீரை கடலில் விடக்­கூ­டி­ய­தான நிலக்கீழ் சுரங்கக் கட்­டு­மானப் பணிகள் கொழும்பில் ஆரம்பம்!

0
158

 கொழும்பு நகரை அண்­டிய பகு­தி­களில் ஏற்­படும் வெள்­ளத்தின் கார­ண­மாக ஏற்­படும் அச்­சு­றுத்­தல்­களை குறைப்­ப­தற்­காக கொழும்பு வடக்கு, நவ­மு­து­வெல்ல நிலக்கீழ் சுரங்க கட்­டு­ மானப் பணிகள் பெரு­நகர் மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்­கவின் தலை­மையில் கடந்த 5 ஆம் திகதி(வியாழக் கிழமை) ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது.

பெரு­நகர் மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சின் கொழும்பு நகரை அண்­டிய நகர அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்தின் மூல­மாக செயற்­ப­டுத்­தப்­படும் இந்த பாரிய வேலைத் திட்­டத்­துக்­கான மொத்த நிதி­யொ­துக்­கீடு 365 கோடி ரூபா­வாகும்.

colombo-4

கொழும்பு வடக்கு பிர­தே­சத்தில் ஏற்­படும் வெள்ள நிலை­மையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக புதிய வீதியின் பிர­தான கால்­வாயில் ஆரம்­பிக்­கப்­படும் இந்த நிலக்கீழ் சுரங்கம், நவ­மு­து­வெல்ல பிர­தே­சத்தின் ஊடாக நிலத்­துக்கு கீழாகச் சென்று முது­வெல்ல மீன்­பிடி துறை­மு­கத்­துக்கு அருகில் கடலில் திறக்­கப்­படும். 3 மீற்றர் விட்­டத்தைக் கொண்ட இந்த சுரங்­கப்­பா­தையின் நீளம் 760 மீற்­ற­ ராகும்.

 

colombo-3இந்த சுரங்­கத்தின் ஆரம்­பப்­ப­குதி திறந்த கால்­வா­யாக அமைக்­கப்­ப­டு­வ­துடன், அதன்­பின்­ன­ரான பகு­திகள் நிலக்கீழ் சுரங்­க­மாக அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

இதன்­மூலம் செக்­க­னுக்கு 15 ஆயிரம் லீற்றர் நீரை கடலில் விடு­விக்க முடியும்.

colomboஇந்த சுரங்க கட்­டு­மா­னப்­ப­ணிகள், அனு­பவம் வாய்ந்த சைனா பெட்­ரோ­லியம் பைப் லைன் எஞ்­சி­னி­யரிங் கம்­பனி லிமிட்­டெட்­டினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

இந்த சுரங்க நிர்மாணத்தின் பின்னர் நீண்டகாலமாக நிலவிவந்த வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.