சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் பலி!

0
99

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கருகிலுள்ள ரயில் கடவையருகில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 7.10 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழிலிருந்து கொழுப்பு நோக்கி பயணித்த உத்தரதேவி ரயிலுடன் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

IMG-3844சம்பவத்தில் உயிரிழந்தவர் பேஸ்லைன் வீதி, கொழும்பு 2 என்ற முகவரியைச் சேந்த 75 வயதுடைய வரதராசா செல்லப்பா எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.