இன்ஸ்பெக்டரின் தலைமீது ஏறிய விஷப்பாம்பு! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

0
132

நெல்லை மாவட்டத்தில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர், மக்களை அச்சுறுத்திய பாம்பை பிடித்துச்சென்று ஊருக்கு வெளியே விட்டார்.

அவர் பிடித்தபோது தலைமேல் ஏறிய பாம்பு படம் எடுத்தபோதிலும், அவர் அச்சமின்றி சாலையில் கொண்டுசென்றதைப் பார்த்த பொதுமக்கள் பாராட்டினர்.
ispetarநெல்லை மாவட்டம், வீரவநல்லூரில் இன்ஸ்பெக்டராக இருப்பவர், சாம்சன்.

இயற்கைமீது அக்கறைகொண்ட அவர், தான் பணியாற்றும் இடங்களில் எல்லாம் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

பள்ளி மாணவ மாணவிகளின் நலனில் அக்கறையுடன் செயல்படும் அவர், மாணவர்கள் மூலமாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்.

பறவைகளைக் கூண்டில் அடைத்து விற்பனை செய்பவர்களிடமி ருந்து அவற்றை விடுவிப்பது, அரசு சுவர்கள், பள்ளிக் கட்டடங்களின் சுவர்களில் ஒட்டப்படும் சினிமா, அரசியல் போஸ்டர்களைக் கிழித்து எறிந்துவிட்டு, அந்த இடங்களில் அழகிய வண்ண ஓவியங்களை வரையச் செய்வது, மரங்களில் ஆணி அடிப்பதைத் தடுப்பதுடன், அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை அழைத்து எச்சரிப்பது என இயற்கையைப் பாதுகாக்கும் செயல்களில் ஈடுபட்டுவருகிறார்.

ஒவ்வொருவரும் வீட்டுக்கொரு மரம் வளர்க்க வேண்டும். பள்ளி மாணவர்களிடம் மரம் வளர்ப்பின் அவசியத்தைத் தெரியப்படுத்தி, அவர்களை மரம் வளர்க்க உற்சாகப்படுத்த வேண்டும்.

தனது கொள்கையில் சமரசமின்றி, இயற்கை மற்றும் உயிரினங்கள்மீது அன்பு செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

பறவைகள் விலங்குகள்மீது இவர் காட்டும் அக்கறையைப் பார்த்து, பொதுமக்களும் அவரைப் பின்பற்றத் தொடங்குவதுடன், வீட்டு மொட்டைமாடியில் பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது மட்டுமல்லாமல், பாம்புகள் மீதும் சாம்சனுக்கு அக்கறை அதிகம்.

அதனால், வீடுகள் தெருக்களில் திரியும் பாம்புகளைப் பிடித்துச் சென்று வனத்துறையினரிடம் ஒப்படைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

யாரையாவது பாம்பு அல்லது தேள் போன்றவை கடித்துவிட்ட தகவல் அவருக்குக் கிடைத்துவிட்டால், எந்த நேரமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆஜராகிவிடுவார்.

பாம்பு உள்ளிட்ட பிராணிகளால் கடிபட்ட நபருக்குத் தேவையான முதலுதவி சிகிச்சையை முடித்து, மருத்துவமனைக்குச் செல்ல ஏற்பாடு செய்வார்.

தன்னால் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாத அளவுக்கு பணிச்சுமை இருக்கக்கூடும் என்பதால், பாம்பு கடிக்கான முதலுதவி சிகிச்சைகுறித்து பொதுமக்களில் ஆர்வம் உள்ளவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

அழிந்து வரும் சிட்டுக்குருவிகளைக் காப்பாற்றுவதற்காகவும் சீரிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

REWWWWஅதற்காக, அழுகிப்போன தேங்காய்களை வாங்கி, அதில் துளையிட்டு, தேங்காயைச் சுரண்டி எடுத்துவிட்டு, குருவிக்கான கூடுகளாக்கி, அவற்றை பொது இடங்களில் உள்ள மரங்களில் தொங்க விடுவதுடன், வீடுகளில் வைக்கவும் ஏற்பாடுசெய்கிறார்.

அரசு அலுவலகங்கள், பள்ளிகளின் வளாகங்களில் இருக்கும் மரங்களில், இத்தகைய பறவைக்கூடுகள் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில், வீரவநல்லூரில் உள்ள கடை வீதியில், மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடத்தில் அவர் நின்றுகொண்டிருந்தபோது, மரத்தில் ஒரு பாம்பு இருப்பதைக் கண்டார்.

பாம்பைப் பார்த்ததும் பொதுமக்கள் அச்சத்தில் பதறியபோது, அவர்களை அமைதிப்படுத்திய இன்ஸ்பெக்டர் சாம்சன், கொஞ்சமும் அச்சமின்றி அந்தப் பாம்பை வாரிப்பிடித்துக் கொண்டார்.

அந்தப் பாம்பு, அவர் கைகளில் சிக்கியதும் அங்கிருந்து தப்ப முயன்றது. ஆனால், லாகவமாகப் பிடித்துக் கொண்ட அவர், தன் தோள்மீது ஏற்றிக்கொண்டார்.

dert5
கீழே இறங்கிய பாம்பு

காக்கிச்சட்டை மீது ஊர்ந்த பாம்பு, அவரது தோள் மீதேறியது. பின்பு, அவரது தலைமீது ஏறி, படம் எடுத்தது. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாத அவர், சற்று தூரத்தில் ஓடை ஒன்று செல்லும் இடத்துக்குச் சென்று, சரிந்தபடியே பாம்பை இறக்கிவிட முயன்றார். அதைப் புரிந்ததுபோல பாம்பும் அவரது உடலிலிருந்து இறங்கி, அருகிலிருந்த புதருக்குள் ஓடி மறைந்தது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.