உள்ளே இருந்தபடியே தர்ஷனின் காதலுக்கு வேட்டு வைத்த வனிதா! அக்கா வேற லெவல்!

0
345

சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபடியே தர்ஷனின் காதலுக்கு வேட்டு வைத்துள்ளார் வனிதா. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட வனிதாவை டிஆர்பிக்கு ஆசைப்பட்டு விருந்தாளியாக அழைத்து வந்தார் பிக்பாஸ்.

வனிதாவும் பிக்பாஸ் எதிர்பார்த்தப்படி ஆட்டம் ஆடினார். இதனால் பிக்பாஸ் வீட்டில் நாள்தோறும் ஒரு சண்டை சச்சரவு என வீடு அல்லோகளப்பட்டது. நிகழ்ச்சியிலும் சுவாரசியம் கூடியது.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கையோடு, அபிராமிக்கு தூபம் போட்டார் வனிதா. இதனால் மயங்கிப்போன அபிராமி பேயாட்டம் ஆடி முகெனுடனான காதலை முறித்துக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து மதுமிதா கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இதற்கும் வனிதாதான் காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் இதனை அறிந்த தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி, கண்ணீர்மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் என்னால் தர்ஷனின் இமேஜ் கெடக்கூடாது. தர்ஷன் வெற்றி பெற நான் தடையாக இருப்பது போல் தெரிந்தால் அவரை விட்டு விலகி விடுகிறேன்.

நான் தர்ஷன் மேல் உயிரையே வைத்துள்ளேன். ஆனால் என்னால் அவருக்கு எந்த கெட்ட பெயரும் இருக்கக்கூடாது.

நான் கொடுக்கும் பேட்டிகளால் தர்ஷனுக்கும் ஷெரினுக்கும் மனவேதனை ஏற்படுகிறது. இது எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது.

தர்ஷன், ஷெரின் இருவரும் என்னால் மனவேதனை அடைய வேண்டாம். இனிமேல் நான் தர்ஷன் குறித்து பேச மாட்டேன்.

இந்த நிமிஷத்தில் இருந்து நான் தர்ஷன் வாழ்க்கையில் இல்லை. இருந்தாலும் என் மனதில் எப்போதும் தர்ஷன் இருப்பார்.

அவரை காதலிக்க யாருடடைய பர்மிஷனும் தேவையில்லை என்று அழுதுக்கொண்டே பேசியிருக்கிறார் சனம் ஷெட்டி.

சனம் ஷெட்டியின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் பல உறவுகளுக்குள் சண்டை மூட்டி விட்டு படாதபாடு படுத்தி பிரித்துவிட்டவர் வனிதா.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபடியே தர்ஷனின் காதலுக்கு வேட்டு வைத்துள்ளார்.

LEAVE A REPLY

*