யாழ் மாநகர சபையின் நிரந்தரக் கட்டிடத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அடிக்கல் நாட்டி வைப்பு..!!

0
86

யாழ்ப்பாண மாநகரசபைக்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல் இரண்டாம் முறையாக இன்றும் நாட்டப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இரண்டாம் முறையாக நாட்டி வைத்தார்.

3யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர், இன்று காலையில் நகரப்பகுதிகளில் நடைபெறும் சில வீதி அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட பின்னர், அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

50e855c5-8873-4620-a9e9-082043ed42f4-560x420யாழ் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் நிகழ்வு இடம்பெற்றது.2,350 மில்லியன் ரூபா செலவில் மாநகரசபை கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள போதும், தற்போதைக்கு 750 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது.

76b26427-5a43-414a-879d-b1bad9aa8af3-696x522-1இந்த நிகழ்வில், நிதி அமைச்சர் மங்கள சமரவீர, மேல்மாகாண, நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் நகர அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, 2014ம் ஆண்டில் அப்போதைய அமைச்சர் பசில் ராஜபக்சவும், நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.