16 வயது அர்ச்சனா.. ஸ்கூலுக்கு அம்மாவின் புடவையுடன் வந்து.. வகுப்பறையில் தூக்கு.. அதிர்ச்சியில் மதுரை

0
334

மதுரை: 16 வயது அர்ச்சனா.. ஸ்கூலுக்கு வரும்போதே அம்மாவின் புடவையை எடுத்து வந்திருந்தார்.. கிளாஸ் ரூமில் தூக்கு போட்டு கொள்ளத்தான்!

மதுரை கே.புதூர் காந்திபுரத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் அர்ச்சனா.. அங்குள்ள லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

என்ன நடந்தது என்றே தெரியவில்லை.. கடந்த ஒரு வாரமாகவே அர்ச்சனா ஸ்கூலுக்கு போகவில்லை.

இந்நிலையில், இன்று அவர் ஸ்கூலுக்கு வந்திருந்தார். அதுவும் காலைல எட்டரை மணிக்கே வந்துவிட்டார்.

பள்ளி, வகுப்பில் யாருமே இல்லை.. கொஞ்ச நேரத்தில் மாணவிகள் வந்து பார்த்தபோது அர்ச்சனா கிளாஸ் ரூமில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு சடலமாக தொங்கி உள்ளார்.

இதை பார்த்து மாணவிகள் அலறி அடித்து கொண்டு பள்ளி முதல்வரிடம் சொல்லவும், உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றினர். ஆனால் அதை கொண்டு செல்ல வாகனம் வரவில்லை.

நீண்ட நேரம் பொறுத்து பார்த்த போலீசார் அர்ச்சனாவின் சடலத்தை ஒரு டூவீலரில் வைத்து ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

ஆனால் அதற்குள் மாணவியின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்று திரண்டு விட்டனர்.

அர்ச்சனாவின் சாவுக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்று சொல்லி, சடலத்தை கொண்டு போக போலீசுக்கு வழிவிட மறுத்தனர்.

surewஅதனால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு என பள்ளி வளாகமே பரபரப்பானது. பிறகு சடலத்தை கொண்டு செல்ல வாகனம் வந்ததும், அதில் அர்ச்சனாவின் உடல் போஸ்ட் மார்ட்டத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில்தான், அர்ச்சனா ஒரு வாரம் ஸ்கூலுக்கு வரவில்லை என்பதும், வீட்டில் இருந்து வரும் போதே தற்கொலை எண்ணத்துடன்தான் வந்திருப்பதாகவும் தெரியவந்தது.

இதற்காக தன்னுடைய அம்மாவின் சேலையை ஸ்கூல் பையில் மறைத்து கொண்டு வந்து இருக்கிறார்.

மாணவியின் மரணத்தினால் பிற மாணவிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பள்ளி முன்பு போராட்டம், பரபரப்பு காரணமாக ஸ்கூலுக்கு இன்று லீவு விடப்பட்டுள்ளது.

அர்ச்சனா எதற்காக தற்கொலை செய்தார், ஒரு வாரம் ஸ்கூலுக்கு ஏன் வரவில்லை, வீட்டில் ஏன் இதை பற்றி கேட்கவில்லை, என்றெல்லாம் இனிமேல்தான் போலீஸ் விசாரணையில் தெரியவரும்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.